தஞ்சாவூர், நவ.8 - பல அணிகளாக சிதறிக் கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜக வும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்தி ருக்கிறார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சாவூரில், வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கரு ணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது. மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பேருந்து பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளி யேற்றியுள்ளார். மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. திமுகவை அழிக்க வேண்டும் என பலர் கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர் களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணி யில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்க ளுக்கு முதலமைச்சர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் திமுக கூட்டணி யில்தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியு உள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.