districts

img

கிராமப்புற ஏழைகளைப் புறக்கணிக்கும் பட்ஜெட் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், பிப்.8 - விவசாயிகள், கிராமப்புற ஏழைக ளைப் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பெரு மாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கும் நடவடிக்கையை கண் டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக் கீட்டை குறைத்ததைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சனியன்று பெருமாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர்  வடக்கு ஒன்றியத் தலைவர் கே.ரங்க சாமி தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் ஆர்.குமார்,  மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே.கொளந் தசாமி,  வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆறுமு கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க வடக்கு ஒன்றியத் தலை வர் பரணி சீனிவாசன், ஒன்றியச் செயலா ளர் கே.சுப்பிரமணி ஆகியோர் பட் ஜெட்டைக் கண்டித்துப் பேசினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு  ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன்  உட்பட திரளானோர் பங்கேற்றனர்.