அறந்தாங்கி நகர்மன்ற 24 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சம்சாத்பேகம் வெற்றி பெற கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர்.
***
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 24 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.ஜெயபிரகாஷ்-க்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், சிஐடியு பொருளாளர் எம்.பி.கே. பாண்டியன், நகர குழு உறுப்பினர் கே.கோபு உள்ளிட்ட பலர் வாக்குச் சேகரித்தனர்.