தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம் ஏலக்குறிச்சி, தென்னூர், வரதராஜன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா புதன்கிழமை அதிகாலை கொண்டாடப் பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. கிறிஸ்தவ தேவால யங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினர். கிறிஸ்த வர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொ ருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சாலைப் பணி துவக்கம்
தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பைங்கால் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பைங்கால் உள்குடியிருப்பிற்கு ரூ.11.27 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
அரசு கல்லூரியில் வளாக நேர்காணல்
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் வியா ழக்கிழமை நடைபெற்றது. சென்னை புரூடில் இன்டெக்கரேடேட் சர்வீஸ் சொலிசன் நிறு வனம் கலந்து கொண்டு, 186 மாணவ-மாணவி யர்களிடம் பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி, அதில் தகுதியான 86 பேரை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு அந்நிறு வனத்தைச் சார்ந்த வினோ தினி, சுரேஷ், கல்லூரி முதல்வர் ரமேஷ் ஆகி யோர் பணி அழைப்புக் கடிதங்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலை வாய்ப்பு புல ஒருங்கி ணைப்பாளர் ம. இராச மூர்த்தி மற்றும் இணைப் பேராசிரியர்கள், இயற்பி யல் துறையினர் செய்தி ருந்தனர்.
கம்பு விற்பனை தொடக்கி வைப்பு
பெரம்பலூர், டிச.26 - வேளாண்மை உற்பத் தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கம்பினை, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சிறப்பு அங்கா டிகளில் குறைந்த விலை யில் விற்பனை செய்யும் வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப் பதிவாளர் க.பாண்டியனி டம், கம்பினை வழங்கி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
கீழப்பழுவூர் நெல் வயல்களில் விவசாயிகளுக்கு களப் பயிற்சி
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் கிராமத்திலுள்ள வயல்களில், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு சார்பில் சூழல் ஆய்வு மற்றும் விவசாயிகளுக்கு களப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக மேலாண்மை அலுவலர் தமிழ்குமார், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுதல், தரமான அரசு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனஸ் ஃப்ளோரசன்ஸ், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், அதன் பயன்கள், பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை அடையாளம் காணுதல், நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்தல் பற்றி விளக்கம் அளித்தார். திருமானூர் வட்டார வேளாண்மை துணை அலுவலர் கொளஞ்சி, உதவி அலுவலர் சரத்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா, ஜிங் பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தும் முறைகள், வயல்வெளிகளில் விளக்கு பொறி வைத்தல் மற்றும் இயற்கை சூழலை பாதுகாக்கும் முறைகளுடன் சாகுபடி செய்தல் அவசியம் குறித்து பயிற்சி அளித்தனர்.
கிராம அறிவியல் திருவிழா
அரியலூர், டிச.26- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் வானவில் மன்றம் சார்பில் கிராம அறிவியல் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டி மடம் ஒன்றிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார். ஆண்டிமடம் ஒன்றிய வானவில் மன்ற கருத்தாளர்களான தமிழ்செல்வன் மற்றும் கலைவாணி ஆகியோர், மாணவர்கள் மற்றும் மாண வர்களின் பெற்றோர்களுக்கு கிராம அறிவியல் திருவிழா செயல்பாடுகளை நடத்தி காண்பித்தனர். மெட்ரிக் மேளா, அறிவியல் பாடல்கள், மந்திரமா? தந்திரமா, மாணவர்களின் அறிவை தூண்டக் கூடிய புதிர் கணக்குகள், விடுகதைகள், மாணவர்களின் படைப்பாற் றலை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் உள்ளிட்ட அறி வியல் செயல்பாடுகள் நடத்தப்பட்டன.
ஆண் சடலம் மீட்பு
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் ரயில்வே கேட் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படையின ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தொடர் கனமழையால் பயிர்கள் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
திருவாரூர், டிச.26 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. வடகிழக்குப் பருவமழை கூடுதலாக பெய்த காரணத்தால் நன்னிலம் ஒன்றியத்தில் இடியாறு உடைப்பு எடுத்து அன்னதான புரம், முகந்தனூறு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகள் சேதம் அடைந் துள்ளன. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து உரிய கணக்கெடுப்பை நடத்தி நிவாரணங்களை வழங்க வேண்டும். மன்னார்குடி கிராமத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூன்று தலைமுறை களாக அரசு புஞ்சை தரிசு நிலத்தை சரி செய்து சமப்படுத்தி விவசாயம் செய்து வரு கிறார்கள். சாத்தனூர், கருவாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயி களுக்கு அரசு பட்டா வழங்கி இருக்கிறது. மகாதேவப்பட்டினம், கோட்டையைச் சுற்றி யுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யும் சுமார் 15 விவசாயிகளுக்கு இதுவரை பட்டா வழங்கப் படவில்லை. உடனடியாக பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். கொரடாச்சேரி ஒன்றியத்தில், பெருந்தர குடி ஊராட்சி குளிக்கரையில் கட்டப்பட்டு உள்ள பருத்தி சேமிப்பு குடோனை உடனடி யாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கொரடாச்சேரி 18-வாய்க்கால், ஒட்டக்குடி பாசன வாய்க்கால் பகுதிகளில் தண்ணீர் தேங்கி வண்டல் படிந்து பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முசிறியம் ஊராட்சி முஸ்லிம் கிரா மத்தில், வாரிக்கரை வரை செல்லும் வயல் வெளி சாலையை சீரமைக்க வேண்டும். அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். அறுவடை துவங்கும் நிலையில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணி களை ஆயத்தப் பணிகளை உடனடியாக செய்து நெல் சுத்தம் செய்யும் இயந்திரம், எடை இயந்திரம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலை யத்தை முன்கூட்டியே அறிவித்து செயல் படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்வதை தடுத்தும், காலத்தில் கொள்முதல் செய்திடவும் வேண்டும். கூட்டுறவு கடனை வட்டியோடு வசூல் செய்ய அதிகாரிகள் நிர்ப்பந்தப் படுத்துவதை கைவிட வேண்டும். இவ்வாண்டு குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் விவசாயி களுக்கு 50 சதவீதம் வருவாய் இழப்பு உள்ளது. எனவே கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும். மாத்தூர், கண்டியூர் போன்ற வருவாய் கிராமங்களில் ஓய்வு பெற்ற கிராமப் பணியாளர்களை பணி யில் அமர்த்துவதால், முறைகேடுகள் நடப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மயில், பன்றிகளை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் கனமழையால் இந்தாண்டு பெருமளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூ ரன்ஸ் திட்டத்தில் இழப்பீடு பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி வலியு றுத்தி, கோரிக்கைகளை மனுவாக அளித் தார். கூட்டத்தில் திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி, கோட்டூர் மற்றும் முத்துப் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்கள் பகுதி கோரிக்கைகளை மனுவாக அளித்த னர்.
கேசராப்பட்டி கிளை அஞ்சலகத்தில் மக்களின் சேமிப்பு பணம் கையாடல்
பொன்னமராவதி, டிச.26 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிளை அஞ்சலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்பு திட்டம், தொடர் வைப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், தபால் காப்பீடு திட்டம், அடல் பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தங்களது பணத்தை சேமித்து வைத்தனர். இந்நிலையில் கேசராப்பட்டியில் கிளை அஞ்சல் அலுவலராக செயல்பட்ட கருகப்பூலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பொதுமக்களின் பணத்தில் சுமார் ரூ.40 லட்சத்திற்கும் மேலாக அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் கண்டறிந்த பிறகு குற்றத்தை கண்டறிந்தவர்களுக்கு தனித்தனியாக பணத்தை பட்டுவாடா செய்துள்ளார். இதுமட்டுமின்றி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் முதியோரிடமிருந்து சுமார் ரூ.40 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கேசராபட்டி அஞ்சலகத்தை முற்றுகையிட்டு கண்ணீர் விட்டு கதறினர்.
ஏரியில் மூழ்கி மாணவர் பலி
அரியலூர், டிச.26 - அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரபூபதி மகன் நகுலன் (16). ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்த வந்த இவர், புதன்கிழமை பிறந்த நாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கொம்பேடு சாலையிலுள்ள பிள்ளை ஏரியில் குளித்துள்ளார். அப்போது நீச்சல் தெரியாத நகுலன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். சக மாணவர்கள் அவரைப் பிடித்து இழுத்தும் காப்பாற்ற முடியாததால் கூச்சலிட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஏரியில் குதித்து தேடி பார்த்தும் நகுலன் கிடைக்கவில்லை. உடனே ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு பணித் துறையினர் ஏரியில் இறங்கி பொதுமக்களுடன் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, நகுலன் சடலமாக மீட்கப்பட்டார்.
விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
தஞ்சாவூர், டிச.26 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ஜி.சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் குருவிக்கரம்பை, பூக்கொல்லை, பள்ளத்தூர், சேதுபாவாசத்திரம், செந்தலைவயல், பெருமகளூர் ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. நெற்பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில் நுட்பங்கள் பற்றியும், விதை தேர்வு, விதை நேர்த்தி, நீர் மேலாண்மை, மண் பரிசோதனையின் மூலம் உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவத்தில் பயிர் செய்தல் குறித்த தொழில் நுட்பங்கள் பற்றி கூறப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் பேசுகையில், இலை வண்ண அட்டை கொண்டு உரமிடுதல், நெற்பயிரில் முட்டை ஒட்டுண்ணிகளை கொண்டு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி கூறினார்.
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள்
புதுக்கோட்டை, டிச.26 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “மாணவிகளின் உயர்கல்வியினை உறுதி செய்யும் நோக்கத்தில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ‘புதுமைப்பெண் திட்டம்” 5.9.2022 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் டிச.30 அன்று தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தினை துவக்கி வைப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுடன், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. எனவே, புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா முன்னேற்பாடு பணிகளை தொடர்புடைய அரசு அலுவலர்கள் சிறந்த முறையில் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது” என்றார்.
லாட்டரி விற்ற 20 பேர் கைது: சொகுசு காருடன் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்
திருச்சிராப்பள்ளி, டிச.26 - திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடிய நிலையில், அவர்களி டமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் லாட்டரி விற்ப னைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தடையை மீறி ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தலை தூக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறக்கிறது. வெளி மாநில லாட்டரி விற்பனையில் ஈடு பட்டுள்ளவர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து திருச்சி தொழி லதிபரும், திமுக பிரமுகருமான லாட்டரி அதிபர் மனோகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட னர். தொடர்ந்து புதனன்று திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த சரக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இதில் உறை யூர் பகுதியில் பிடிபட்ட செந்தில் குமரன் என்பவரிடமிருந்து 4,92,100 ரூபாய் கட்டு, கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் கைதான மற்றவர்களிடமிருந்து 10 செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டு, கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைதான சிலர், லாட்டரி விற்றதுடன் பரிசுத்தொகை விழுந்தவர்களுக்கு பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பரிசுத்தொகை கிடைத்தவர்கள் ஏமாற்றப்பட்டு, அந்தந்த சரக போலீசில் புகார் அளித்ததன் பேரில் இந்த தீவிர நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சி: டிச.30 இல் வகுப்புகள் தொடக்கம்
திருச்சிராப்பள்ளி, டிச.26 - திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பாணை 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வினை போட்டித் தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.30 அன்று காலை 10 மணியளவில் துவங்கப்படவுள்ளது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப் பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக் குறிப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு சிறுபான்மையினர் நன்றி தெரிவிப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.26 - சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து விழா பேருரையாற்றி னார். அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற சிறு பான்மையினர் உரிமைகள் தின விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த 469 பயனாளிகளுக்கு ரூ.26.77 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், நினைவு பரிசுகளையும் வழங்கினர். விழாவில் பங்கேற்ற பயனாளிகள் தெரி விக்கையில், “என்னுடைய பெயர் ஆயி ஷாபீ. நான் மேலஉடையார் தெரு, பெரு வளநல்லூர் கிராமத்தில் வசிக்கிறேன். நான் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர். என்னுடைய குடும்பம் பொருளாதார வசதி யின்றி மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு போதிய வருமா னம் இல்லாததால் வறுமையில் வசித்து வருகிறேன். ஆகவே சிறுபான்மை நலத்து றையில் சிறு வணிக கடன் உதவித்தொ கைக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது நிலை கருதி ஆடு வளர்ப்பு திட்டத்தில் எனக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினர். இதன் மூலம் எனது குடும்பம் முன்னேற வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார். பயனாளி அருள்மணி தெரிவிக்கையில், “நான் கல்கொத்தம்பட்டியில் வசித்து வரு கிறேன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு இரண்டு குழந்தை கள் உள்ளனர். நான் திருச்சி மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பொருளாதாரத்தில் பிற்பட்ட கிறிஸ்தவ மகளிர் பொருளாதார உதவி பெறும் திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பித்தி ருந்தேன். எனது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரத்தை ஆடு வளர்க்கும் திட்டத்தில் வழங்கினர். இத்திட்டத்தின் மூலம் எனது குடும்ப வருமா னம் பெருகும். இத்திட்டத்தை வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சருக்கு நன்றி” என்றார்.