districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சியில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சிராப்பள்ளி, நவ.5 - திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நூற்றாண்டு நினைவுப் பள்ளி, ராஜாஜி வித்யாலயா, ராஜம் கிருஷ்ண மூர்த்தி பள்ளி, ஹோலி கிராஸ், சந்தான வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு செவ்வாயன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை  தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகள் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக விமானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்த வண்ணம்  இருக்கிறது. இது, பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் விமான  பயணிகள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆண் சிசுவை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசிச் சென்ற கல்நெஞ்சர்கள்

தஞ்சாவூர், நவ.5 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் சரகம் ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம், துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் குணபாலன் என்ப வருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் செவ்வாய்க் கிழமை காலை பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக் கப்பட்டு கிடந்தது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற வர்கள், சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.   சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் காவலர்கள் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் உடலை  மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய் வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பச்சி ளங்குழந்தையை வீசிச் சென்ற கல்நெஞ்சர்களை தேடி வருகின்றனர். 

விதிமீறல்: 21 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.47 ஆயிரம் அபராதம் விதிப்பு

தஞ்சாவூர், நவ.5 -  தீபாவளிப் பண்டிகையை முடித்து மக்கள் ஞாயிற்றுக் கிழமை தங்களது ஊர்களுக்கு சென்றதையொட்டி, தஞ்சாவூ ரிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்ட ணம் வசூலிக்கப்படுகிறதா என தஞ்சாவூர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் (பொறுப்பு) ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், நடைச்சீட்டு பக்கவாட்டு  விவரங்கள், இருக்கை பட்டை, முதலுதவிப் பெட்டி, வாகன ஆவணங்கள் இல்லாதது என 21 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. மேலும், இப்பேருந்து களுக்கு ரூ. 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காவிரி பாலத்தின் கைப்பிடி சுவரில் பழுது: சீரமைப்பு பணிகள் 2 நாட்களில் நிறைவடையும்

நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தகவல் திருச்சிராப்பள்ளி, நவ.5 - திருச்சி காவிரி பாலத்தில் கைப்பிடி சுவரில் ஏற்பட்ட பழுது சாதாரணமானதுதான், பாலத்தின் உறுதித் தன்மைக்கு ஆபத்து ஏதுமில்லை என நெடுஞ்சாலைத் துறையினர் விளக்கமளித்துள்ளனர். திருச்சி - ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு இடையே காவிரியாற்றின் குறுக்கே 1976 இல் பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. பாலத்தில் சிறு சிறு பழுதுகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. எனவே கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாலத்தில் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து, வாகனங்கள் செல்லும் போது அதிர்வு அதிகரித்ததையடுத்து, ரூ.7 கோடி திட்ட மதிப்பில் பாலம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாலத்தில் தடை செய்யப்பட்டது. சுமார் 6 மாதம் காலம் நடந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் காவிரி பாலத்தின் 9 ஆவது தூண் அருகே கைப்பிடி சுவர் சற்று விலகியதாக தகவல்கள் பரவின. அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, மாநகர போலீசார் இரும்பு தடுப்புகளை (பேரி கார்டுகள்) வைத்து குறிப்பிட்ட இடத்தில் மக்கள் நடந்து செல்ல தடை ஏற்படுத்தப்பட்டது.  தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், கைப்பிடி சுவர் மற்றும் அதன் அருகேயுள்ள நடைமேடைகளில் இணைப்பு பகுதிகள் விலகியிருந்த இடத்தில் சிமெண்ட் கலவை கொண்டு பூசினர். என்றாலும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல்வேறு தகவல்கள் இணைய வழியிலும் சமூக ஊடகங்களிலும் பரவியது. இதனையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கூறுகையில், “அக்டோபர் 30 ஆம் தேதி காவிரி பாலத்தில் சாலை விபத்து ஏற்பட்டது. இதில் கார் ஒன்று நடைமேடையில் மோதியதால், 9 ஆவது தூண் அருகே நடைமேடை மற்றும் கைப்பிடி சுவர் இணைப்பு பகுதி சற்று விலகியது. இவை பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருப்பவை. இதனால் பாலத்துக்கோ பாலத்தின் உறுதித்தன்மைக்கோ எந்த பாதிப்பும் கிடையாது.  உடனே பாதிக்கப்பட்ட இடத்தில் பூச்சு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீண்டும் பூச்சுப் பணிகள் நடந்த (சேதமடைந்த) இடத்தில், தற்போது சுமார் 2 மீட்டர் நீளத்துக்கு நடைமேடை அகற்றப்பட்டு வலுவான பூச்சு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் விலகிய இணைப்பு பகுதிகளில் உறுதியான பிடிப்பை ஏற்படுத்தும். இன்னும் 2 நாட்களில் இந்த பணி நிறைவடையும். இதனால் பாலத்துக்கோ பாலத்தின் உறுதித்தன்மைக்கோ எந்தவிதமான ஆபத்தோ, பாதிப்போ கிடையாது” என்றனர்.

நெல்லை, தென்காசி: விடிய விடிய  மழை

திருநெல்வேலி, நவ. 5- நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரண  மாக பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி  உள்ளனர்.தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடியில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை  காலகட்டத்தின்போது நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறும். கடந்த வாரம் பாபநாசம் அணையில் இருந்து பாச  னத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 கால்வாய்கள் மூலம் நிலப்பரப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் 93.30 அடி தண்ணீர் இருக் கும் நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து 1004 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 40  ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.தற்போது பாபநாசம், வி.கே.புரம், அம்பையில் தொடங்கி சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், கல்லிடைக்குறிச்சி, கோபால சமுத்திரம், மேலச்செவல், சீவலப்பேரி வரையிலும் விவசாயிகள் தங்களது வயல்களை நெல் சாகுபடிக்கு பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் தொழி அடிக்கும் பணி முழுவீச்சில் நடை பெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை யில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்புபகுதிகளில் சில  நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடனா அணையில்  3 மி.மீ, கருப்பாநதியில் 3.5 மி.மீ, குண்டாறில் 2 மில்லிமீட்டரும் பெய்துள்ளது.

நீர்வீழ்ச்சியில் குவியும் மக்கள்

இராஜபாளையம், நவ.5- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா  கோவில் உள்ளது. இங்கு நகரையாறு உற்பத்தியாகி தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.  மழைக்காலங்களில் இங்கு சனி, ஞாயிறு உள்பட விடு முறை தினங்களில் ஏராளமான மக்கள் குளித்து குளிர்ச்சியை அனுபவித்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு தீபா வளிக்கு மறுநாள் முதல் சனி, ஞாயிறு தினங்களில் தொடர்  விடுமுறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.