districts

img

இனவெறி இலங்கையை நிர்மூலமாக்கியது போல் மதவெறி இந்தியாவை நாசப்படுத்தி விடும் கே.பாலகிருஷ்ணன் கருத்து

திருச்சிராப்பள்ளி, ஜன.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருச்சி புறநகர் மாவட்ட சிறப்பு பேரவை வெள்ளியன்று சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சிவராஜ் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெய சீலன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் பேசினர். மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அம்பேத்கரால் உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அரசியல் சாசனத்தை படிப்படி யாக ஒதுக்கி விட்டு, மனுஸ்மிருதியை அரசியல் சாசனமாக உருவாக்க பாஜக வினர் முயற்சிக்கின்றனர்.  மேலும் மாநிலங்களை வெறும் நிர்வாக அமைப்பாக மட்டும் மாற்ற சொல்கின்றனர். மாநில அரசும் தேவை யில்லை என்கிறார்கள். ஒரே நாடு என்ற  நிலைமையை உருவாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு மிக அழுத்தமாக வலியுறுத் துகிறது. 2024-ஆம்ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசியல் சாசனம்  என்பதை நிலைநிறுத்த அனைத்தை யும் செய்வார்கள்.  இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்கிறார்கள். சமஸ்கிருதம்தான் நிரந்தரமான மொழி என்கின்றனர்.

இதன் மூலம் தமிழை அழிப்பதற்கு பாஜக  ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்படு கிறார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரு கிறார்கள். இனவெறி இலங்கையை நிர்மூலமாக்கியது என்றால், மதவெறி இந்தியாவை நாசப்படுத்தி விடும்.  பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த 10.45 லட்சம் கோடி இருந்தால்  டீசல், பெட்ரோல், கேஸ் விலைகளை  ஏற்ற வேண்டாம். மக்களுக்கு ஏராள மான சலுகைகை வாரி வழங்கி இருக்க லாம். இந்த ஆட்சி விவசாயி, தொழி லாளி, பெண்களுக்கான ஆட்சியாக இல்லை.பெருமுதலாளிகளுக்கான ஆட்சியாகத் தான் உள்ளது.  2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக  வெற்றி பெற்றுவிட்டால் ஒரு சாதாரண உரிமை கூட யாருக்கும் இருக்காது என்ற நிலை வரும். ஒட்டுமொத்தமாக இந்த சமூகத்தை தலைகீழாக மாற்றி அமைத்து விடுவார்கள். சாதிய ஏற்றத் தாழ்வு நிலைநிறுத்தப்படும். தீண்டாமை  கொடுமை கொடிக்கட்டி பறக்கும். எனவே 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக என்ற பாசிச குணமுள்ள ஆட்சியை இந்தியாவில் வரவிடக்கூடாது’’ என்றார்.  முன்னதாக கட்சி நிதி ரூ.10.50 லட்சத்தை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம், மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் வழங்கினார்.