districts

தமிழக மக்களுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெறுக! ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

பாபநாசம், ஏப்.8- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை இழிவுபடுத்தி பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப்  பெற வேண்டும் என மனிதநேய மக்கள்  கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர்  எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, வெளி நாட்டு அமைப்பினர் ஏராளமாகப் பணத் தைக் கொடுத்து, உள்ளூர் மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி, அதன் மூலம் அந்த ஆலை மூடப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.  எந்தவித ஆதாரமும் இல்லாமல் மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் இதுபோன்ற கருத் தைத் தெரிவித்திருப்பது ஆணவத்தின் வெளிப்பாடாகும்.  நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மற்றும் அதற்கு எதிராக தன்னு டைய உயிரைத் தியாகம் செய்தவர் களின் தியாகத்தைக் கொச்சைப்படுத் தும் விதமாக ஆளுநர் ரவி கருத்து தெரி வித்துள்ளார். தொடர்ந்து தமிழக மக்களின் நல னுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்’’ எனக்  கூறியுள்ளார்.