பெரம்பலூர், டிச.26 - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம், எறையூரில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பெரம்ப லூர் சர்க்கரை ஆலையில் 2024-25 ஆம் ஆண்டு அரவை பணியை போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், “இந்த ஆண்டு சர்க்கரை ஆலை அரவைக் காக மொத்தம் 2 லட்சம் டன் கரும்பை அரவை செய்திடவும், தினசரி 2,800 டன்கள் அரவை செய்யவும் திட்ட மிடப்பட்டுள்ளது. அரவைப் பருவத்தில் சராசரி சர்க்கரை கட்டுமானம் 9.75% எடுத்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரும்பு வழங்கிய 3,280 விவசாயிகளுக்கு ரூ.5கோடியே 13 லட்சம் கரும்பு அரவை தொகை வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட் டம், எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளி யில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யின்கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையையும், கட்டுமான பணியை யும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். விழாவில் பெரம்பலூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி க.ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், கரும்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.