திருவாரூர், மார்ச் 21 - சுத்தமான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, சுத்த மான நீரைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாது காப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோ ரிக்கை விடுத்துள்ளது. 1993 இல் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் நாளை உலக தண்ணீர் தினமாக ஐ.நா அங்கீகரித்திருக்கிறது. சுத்த மான தண்ணீர் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, மாறி வரும் சுற்றுச்சூழல் மற்றும் முறையான திட்டமிடலின்மை ஆகியவற்றின் காரண மாகத் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித் துக் கொண்டே வருகிறது. ஆனால், தண்ணீ ரின் முக்கியத்துவத்தை நாம் இன்னும் உணரவில்லை. உலகில் அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. 85 சதவிகி தம் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்து கிறது இந்தியா. ஆனால், அதன் முக்கியத் துவத்தை உணர்ந்து நிலத்தடி நீரை நாம் பராமரிப்பதில்லை. நிலத்தடி நீர் தட்டுப்பாட்டை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் மழை நீர் சேமிப்பு திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப் பட்டது. தமிழகத்தின் அனைத்து கட்டடங் களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டா லும், அது சரியான முறையில் கடைப்பிடிக்கப் படுவது இல்லை.
மழை நீர் சேமிப்பு திட்டத்தை கண்காணிக்க வேண்டிய அரசும், அரசு கட்டடங்களிலேயே மழைநீர் சேகரிப்பு முறையை முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. மழைநீர் சேகரிப்பு வசதி, முறையான வடிகால் வசதி இல்லாததால் தமிழ கத்திற்கு கிடைக்கும் மழை, அசுத்த நீரோடு கலந்து காணாமல் போகிறது. தண்ணீர் பரா மரிப்பு என்பது சுத்த மான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவது மட்டு மின்றி, சுத்தமான நீரைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.அரசு எடுக்கும் நடவடிக் கையை முறையாக அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் கண்மாய் மூலமாக பல லட்சம் கனஅடி தண்ணீர், முறையான திட்டமிடல் இல்லாததால் கடலில் வீணாக கலக்கும் சூழல் உள்ளது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் மேலாண்மை அவசியம் என்பதை உணர்ந்து அறிவியல்பூர்வ அடிப்படையில் ஆய்வு செய்து தடுப்பு அணைகளை அமைக்க வேண்டும். அரசு மட்டுமின்றி, ஒவ்வொரு தனி நபரும் தண்ணீர் சேமிப்பை கடைப்பிடிக்க வேண்டும் என இந்நாளில் உறுதி ஏற்போம் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள் ளார். (ந.நி)