districts

பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வ உடன்பாடு: சிபிஎம் சாலை மறியல் கைவிடப்பட்டது

திருவாரூர், ஜூலை 27 -  திருவாரூர் ஒன்றியத்துக்குட்பட்ட வேப்பத் தாங்குடி ஊராட்சி வயலூரில் சித்தாற்று  மேல்தளத்தில் அமைந்துள்ள தொட்டிப்பா லம் பழுதடைந்துள்ளது. இதனை சீர மைக்கக் கோரி விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன் கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு  விடுக்கப்பட்டிருந்தது. வட்டாட்சியர் தலை மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீர்வள ஆதாரத் துறையின் இணை பொறி யாளர், வருவாய் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, ஒன்றியச் செயலாளர் என். இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், சன்னவாய்க்கால் தொட்டிப் பாலத்தை சீர் செய்ய ரூ.39 லட்சம்  மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட உள்ளது என அதிகாரி கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.