districts

2 பேர் தற்கொலை முயற்சி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் விளமலில் நாளை காத்திருப்பு போராட்டம்

திருவாரூர், அக்.18 - திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில்  கடந்த 18 வருடமாக உள்ள டாஸ்மாக் குடோன்  சுமைப் பணி தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், லாரிகளில் மதுபான பாட்டில் களை ஏற்றவும், அவற்றை டாஸ்மாக் கடை களில் இறக்கும் பணி செய்து வருகின்றனர். இதற்காக கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு புதிதாக ஒப்பந்தம் எடுக்கப்பட்டது. புதிய ஒப்பந்ததாரர்களால் மது பாட்டில் களை டாஸ்மாக் கடைகளில் இறக்குவது தொடர்பான கூலி பிரச்சனை தொடர்ந்து எழுந்து வந்தது. இதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்பட்டது. தொ டர்ந்து வேலைகள் நடந்து வந்த நிலையில், அக்.3 அன்று காலை திடீரென 100-க்கும் அதிகமானோர் டாஸ்மாக் கிடங்கில் பணிக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை கண்டித்து விளமல் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. அன்று மாலை திருவாரூர் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது.  பேச்சுவார்த்தையில் திமுக நகரச் செய லாளர் வாரை எஸ்.பிரகாஷ், கோட்டாட்சியர் முன்னிலையில்  தொழிலாளர்களை மிரட்டும் தொனியில் பேசினார். வெளி ஆட்கள் வேலை செய்ததால், வேலை கிடைக்காத விரக்தியில் டாஸ்மாக் சுமைப்பணி தொழி லாளர்களான ரஞ்சித், கிரிதரன் ஆகியோர் எலி மருந்து உட்கொண்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிதரனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலா ளர் கே.கஜேந்திரன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு ஆகியோர்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனை கண்டித்து டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. இதில், 18 ஆண்டுகளாக பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் ரூ. 8,400 வழங்கிட  வேண்டும். வேலைவாய்ப்பை உறுதிப் படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட திருவாரூர் வருவாய் கோட்டாட் சியர் மீது தமிழக அரசு துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்கள் ரஞ்சித், கிரி தரன் ஆகியோருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி, அவர்களது தற்கொலை முயற்சிக்கு  காரணமான வாரை எஸ்.பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து காவல்துறை கைது செய்ய  வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் அக்.20 (வியாழக்கிழமை) விளமல் டாஸ்மாக்  மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.