districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

செய்யாறு, ஏப். 10- திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதி யில் வாடகை வீட்டிலும், அரசு நீர்நிலை புறம்போக்கி லும் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு இலவச வீட்டு  மனை பட்டா வழங்கக் கேட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு செய்யார் வட்டாட் சியரிடம் மனு அளித்தனர்.  மனுவின் மீது உரிய விசா ரணை செய்து சொந்தமாக வீட்டுமனை இல்லாத நபர்களுக்கு வீட்டுமனை கொடுக்கப்படும் என வட்டாட்சியர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திங்க ளன்று (ஏப்.10) செயயாறு கேட்டாட்சியரிடம், இலவச வீட்டு மனை கேட்டு வட்டாட் சியரிடம் அளித்த மனுக்கள்  மீது உரிய விசாரணை நடத்தி, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க ஆவண செய்ய வேண்டும்  என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.