திருவள்ளூர், பிப் 11- வல்லூர் அனல் மின் நிலையத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை யில்உடன்பாடு ஏற்படாத தால் ஒப்பந்த தொழிலா ளர்கள் 4ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் அனல் மின்நிலை யத்தில் 1500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்தாண்டு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வல்லூர் அனல் மின் நிலைய நிர்வாகம் ஊதிய உயர்வு குறித்து பேசி தீர்வு காணலாம் என்று கூறி யது. ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்த பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பிப். 8 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் வெள்ளியன்று (பிப்.11) மூன்றாவது கட்ட மாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
சட்டவிரோத முறையில்....
ஒப்பந்த தொழிலாளர் களை வைத்து வேலை வாங்குவதற்கு தொழிலாளர் ஆணையத்திடம் உரிமமும் பெற வேண்டும். ஆனால் எந்த உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வல்லுநர் அனல் மின் நிலைய நிர்வாகம் வேலை வாங்குகிறது. தொழிலா ளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என சிஐடியு கேட்டுக்கொண்டுள்ளது. நிர்வாகத்துடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில துணைத் தலைவர் கே.விஜயன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், திமுக மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ்,தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில தலைவர் டி.ஜெயசங்கர், மாநில பொதுச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் கே.ரவிச் சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.நரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் எச்.சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.