திருப்பூர், டிச. 28– திருப்பூர் முருகம்பாளையத் தில் ஊருக்கு நடுவே திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொது மக்கள் நடத்திய உண்ணாவிரதம் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறையினர் பல வழியிலும் கெடுபிடி செய்தனர். திருப்பூர், முருகம்பாளையம் பிரதான சாலை பாரக்காடு மது பானக் கடை முன்பாக திங்களன்று காலை பெண்கள் உள்பட பொது மக்கள் திரளானோர் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத் திற்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்கு முன்னரே அந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவ லர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று கெடுபிடி செய்த காவல் துறையினர், ஒலி பெருக்கி வைக் கக் கூடாது, பந்தல் அமைக்கக் கூடாது என அவற்றை அகற்றக் கட்டாயப்படுத்தி அகற்றி விட்ட னர்.
அத்துடன் உண்ணாவிர தம் இருந்தால் கைது செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். காவல் துறையின் கெடுபிடியை யும் மீறி சாலையோரமாக உண் ணாவிரதம் தொடங்கப்பட்டது. அப்போது அங்கிருந்த காவலர்கள் பெண்களிடம் பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 தருகிறார்கள், அதை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே, இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினர். இது பெண்களிடையே பெரும் ஆத்தி ரத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே முருகம்பாளை யத்தில் மதுபானக் கடை அமைக் கப்பட்டபோதே இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எட்டு முறை மாவட்ட ஆட்சி யரிடமும், நேரிலும் மனு அளித்த னர். அத்துடன் முதல்வருக்கும் மனு அனுப்பினர். டாஸ்மாக் மேலாளர் மற்றும் காவல் துறைக் கும் கடிதம் அனுப்பினர். இதன் பிறகும் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்படுத்தப்பட் டது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற் றும் எம்.எல்.ஏ கரைபுதூர் அ.நடரா ஜன் ஆகியோரிடமும் முறையிட்ட னர்.
அவர்களும் மாவட்ட ஆட்சி யரிடம் மக்களின் இந்த நியாய மான கோரிக்கை மீது நடவ டிக்கை எடுக்க பரிந்துரை செய்த னர். ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காத டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து அந்தக் கடையை நடத்தி வந்தது. மேலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் உள்பட பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், பல் வேறு அதிகாரிகளுக்குக் கடிதம் கொடுத்தும் இந்த நிலை நீடித்த தால், திங்களன்று இந்த உண் ணாவிரதப் போராட்டம் நடத் தப்பட்டது. இந்த போராட்டத்தையும் சீர் குலைக்க காவல் துறையினர் கடு மையாக மிரட்டியது பொது மக்க ளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி யது, மக்களைக் காக்க காவல் துறையா? சாராய விற்பனையை பாதுகாக்க காவல் துறையா? என்று பெண்கள் கேட்டனர்.
இந்த போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்தோர் மதுபான பாட்டில்க ளைக் கழுத்தில் மாலையாக அணிந்து பங்கேற்றனர். அனைத் துக் கட்சியினர், கோவில் கமிட்டி யினர், மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் உள்பட பொது மக்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் இதில் பங்கேற்றனர். அந்த இடத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அனைவரும் கருப்புப் பட்டை அணிந்திருந்த னர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.கணே சன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தெற்கு ஒன்றியச் செய லாளர் பா.லட்சுமி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ.அங்குலட் சுமி, மார்க்சிஸ்ட் கட்சி கிளை யைச் சேர்ந்த கருப்புசாமி, பொன் னுசாமி, சுப்பிரமணி, செந்தில் உட் பட பலர் போராட்டத்துக்கு ஆத ரவு தெரிவித்து பேசினர்.