districts

img

நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாதனை

திருநெல்வேலி, ஜூன் 1- நெல்லை மாவட்டம் பணகுடியை  அடுத்த காவல் கிணறு மகேந்திரகிரி யில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் இருந்து விண்ணில் விண்கலத்தைச் செலுத்து வதற்கு தேவையான கிரையோ ஜெனிக் இயந்திரம், விகாஷ் இயந்தி ரம், பி.எஸ். 4 இயந்திரம் ஆகியவை தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்  கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனி தர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்  தின் கீழ் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனி தன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாதிரி இயந்திரத்தின் சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.

அதன்படி 3 ஆவது கட்டமாக 1,700 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்டவுன் ஆரம்பிக்கப்பட்டு  வெள்ளிக்கிழமை சோதனை நிர்ண யிக்கப்பட்ட இலக்கை வெற்றிகர மாக அடைந்தது. இந்நிகழ்ச்சியில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்யராஜ் கலந்து கொண்டு நேரில் பார்வையிட்டார்.

திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்கு நர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குநர் மோகன் ஆகியோர் திரு வனந்தபுரத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டனர். சோதனை வெற்றிகரமாக நடந்த தால் இஸ்ரோ குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் கட்டமாக 725 வினாடிகளும், 2-வது கட்டமாக 350 வினாடிகளும் வெற்றிகரமாக சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.