தூத்துக்குடி, ஜூன் 28- தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணை யில் இருந்து வடகால் பாச னத்திற்கு நாள் ஒன்றுக்கு 1000 கண அடி தண்ணீர் திறந்து விட கோரி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப் புப் போராட்டம் நடை பெற்றது. இதில் சேர்வைகரன் மடம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம், பேய்குளம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் புவி ராஜ் முன்னிலை வகித் தார். மாவட்ட துணைத் தலை வர்கள் நம்பிராஜன், ஐ. கணபதி, சிபிஎம் ஆழ்வார் திருநகரி ஒன்றிய செயலா ளர் ரவி சந்திரன், விவசாயி கள் தனுஷ்கோடி, ராம சந்திரன், ஸ்டான்லி கிஷோர் குமார், அருணாசல மணி, பட்டு முருகேசன், பழனி சாமி, ராஜ், ரொமல, பேச்சி யம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி வடகால் பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பலமுறை, ஆட்சியரிடமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளி டமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.வடகால் பாசனம் பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடைபெற்று வரு கிறது.
தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக பயிர்கள் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் கார ணமாக தண்ணீர் திறந்து விட பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத் தினால், இன்றைய தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இதில் ஒரு பகுதி மக்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு பகுதியினரை தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் துறையினர் வீடுகளில் இருந்து கிளம்பும்போது கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் சொல்வ தற்குக்கூட வாய்ப்பு வழங்கா மல் தடுக்கக்கூடிய முறை யில் தண்ணீர் கேட்கப் போகிறோம் என்று சொன்ன தற்காக காவல்துறை கைது செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின ரின் இந்த மோசமான அணுகு முறையை தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். வடகால் பாசனத்தில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை போண்ற பயிர்கள் தண்ணீர் பற்றாக் குறை காரணமாக வாடும் நிலையில் உள்ளது. சமீப காலமாக முன்கார் சாகுபடி வாய்ப்பு என்பது விவசாயி களுக்கு வழங்கப்படுவது இல்லை. நீண்ட காலமாக முன்கார் சாகுடி மூலமாக கடைமடை பகுதியில் இருக்கக்கூடிய விவசாயி கள் நெல் பயிரிட்டு அதன் மூலம் வருவாய் பெற்று வந்தனர்.
தற்போது முன் கார் சாகுபடியை நிறுத்திய தும் தண்ணீர் பற்றாக் குறைக்கு முக்கிய காரண மாக உள்ளது. வரக்கூடிய காலத்தில் முன்கார் சாகு படியை மேற்கொள்ள வழங்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், பாப நாசம் அணையில் 40 அடி தண்ணீர் இருந்த போது நீர் திறக்கப்பட்டுள்ளது, தற்போது 60 அடி தண்ணீர் உள்ளது .எனவே தண்ணீர் திறந்த விட மாவட்ட நிர்வா கம் தலையீட்டு நட்வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மாவட்ட துணைத் தலை வர் தி.சீனிவாசன், திருவை குண்டம் ஒன்றிய தலைவர் பொன்ராஜ் உட்பட 23 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.