தேனி, பிப்.27- தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலு வலர் பணியிடத்தை நிரப்பக் கோரி தேனி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை, மாற்றுத் திறனாளி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை நல வாரிய உறுப்பி னர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத் தில் பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேல் காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பணி யிடத்தை நிரப்ப வேண்டும், ஆட்சியர் அலுவலக வளா கத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அனுகமுடியாத இடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளி கள் நல அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும், உழவர் சந்தைகளில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தினர். பின்னர், ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.