districts

விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிர்க்கடன் வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதல்வரிடம் கோரிக்கை

தஞ்சாவூர், மே 31-  திங்கள்கிழமை தூர்வாரும் பணி ஆய்வுக்காக தஞ்சை வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி. கண்ணன் அளித்துள்ள  கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  “காவிரி டெல்டா விவசாய பணி களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 12  அன்றும், இந்த ஆண்டு முன்னதாகவே மே 24 அன்றும் தண்ணீர் திறந்த மைக்கு விவசாயிகள் சார்பாக மிகுந்த  மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்.  தற்போது, தஞ்சை மாவட்டம் முழு வதும் மிக வேகமாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கடை மடை வரை உள்ள அனைத்து வாய்க்கால் கள், வடிகால்கள் தூர்வாரும் பணி நடத் தப்பட வேண்டும். தண்ணீர் வந்த பிறகு  தூர்வாருதலில் சிரமம் ஏற்படும் என்ப தால், போர்க்கால அடிப்படையில் அரசு தூர்வாரும் பணியை மேலும் தீவிரப் படுத்தி நிறைவேற்ற முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.  அதேபோல குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து செயல் படுத்தவும், தற்போது உடனடி தேவை யான குறுகியகால தரமான விதைகள், பற்றாக்குறையாக உள்ள பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து உரங்கள், இடு பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நிபந்தனையற்ற பயிர்க்கடன் பெற்று, விவசாயப் பணிகள் மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  அப்போது விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.முனி யாண்டி, ஒன்றிய பொருளாளர் மயில்வா கனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.