தஞ்சாவூர், மார்ச் 14 - தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை 2022-23 ஆண்டிற்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வேளா ண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல் வத்திடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது: “இந்தியாவில் மூன்றாவது மாநில மாக வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை, அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரவேற்கத்தக்கது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டுகிறோம். வேளாண் துறைக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த ரூ.34,220.65 கோடி யினை, இவ்வாண்டு 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்திட வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கை அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதன் பலனாக விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றம் உருவாக்க திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். பயனாளிகள் புள்ளி விவரங்க ளோடு தனி நிதிநிலை அறிக்கை உரு வாக்கியுள்ள சமூக, பொருளாதார விளைவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ள நிலையில், கர்நாடக அரசின் முயற்சிகளை ஆரம்பக் கட்டத் திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அரசுக்கு இதுகுறித்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாக வும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் துணை நிற் போம். திருச்சி - நாகை வழித்தடம் வேளாண் தொழிற்சாலை பெருந்தட மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் உபபொருட்களை கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிமுறைகளுக்குட்பட்டு தொழிற்சா லைகளை உருவாக்கி, டெல்டா மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கான கூடுதல் வருவாய் கிடைக்க வழி வகை மேற்கொள்ள வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.319.38 கோடி ஒதுக்கீடு செய்து, நெல் குவிண்டாலுக்கு சன்ன ரகத் திற்கு ரூ.2060, பொது ரகத்திற்கு ரூ. 2015 கிடைக்க வழிவகை செய்யப்பட் டது. ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளிடம் அளித்த வாக்குறுதி அடிப்படையில் சட்டமாக்க மறுத்து வரும் நிலையில், தமிழக அரசு இதற்கென ரூ.1,500-க்கு மேல் உயர்த்தி நெல் குவிண்டா லுக்கு ரூ.2,500-க்கு கொள்முதல் விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். கடந்த குறுவை பருவத்தில், பயிர்க்காப்பீடு இல்லாமல், உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக் காமல் போனது. பயிர் காப்பீடு முறை யில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் பேசி சில மாற்றங்களை உருவாக்க வேண்டும். பயிர் காப்பீடு முறையில், அனைத்து பகுதிகளிலும், அனைத்து பயிர்களுக்கும், எல்லாக் காலங்களி லும் பயிர் காப்பீடு செய்திட மாற்றங் களை உருவாக்க வேண்டும். தற்போது பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு காப்பீட்டு காலம், தஞ்சை மாவட்டத்தில் ஒரு பகுதியில் நெல் கதிர் வந்து கொண்டு இருந்த போது காப்பீடு தேதி முடிவடைந்து விட்டது.
குறைந்த வாடகையில் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், கூடுதல் இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலம் பயன்படுத் திட வேண்டும். வேளாண் பொறியி யல் துறை அலுவலகங்களை, விவசா யிகள் எளிதில் அணுகும் வகையில் வட்டார அளவில் உருவாக்கிட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 6 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக இயந்திரங்களை ஏற்படுத்தி தர வேண்டும். தற்போது தேவைப்படும் விதை யில் ஏறத்தாழ 15 விழுக்காடு மட்டுமே அரசிடம் உள்ளது. விவசாயிகளிடம் விதை இல்லை என்கிற நிலையில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு அள விற்கு, அனைத்து விதைகளும் அரசிடம் கிடைக்கும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து மேற்கொள்ளப்படும் தூர்வா ரும் பணிகளை, அரசே இயந்திரங் களை வாங்கி தேவைப்படும் பகுதி யில், தேவைப்படும் நேரங்களில், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாண்டு முன்கூட்டியே ஏப்ரல் மாதத்தில் தூர்வாரும் பணி களை மேற்கொள்ள வேண்டும். எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் உற்பத்திக்கு அரசு எடுக் கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்க ளில் எளிதான முறையில் (சில்லறை விற்பனை கடைகள் போல) விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஏற்றுமதிக்கு ஏற்ற நெல் ரகங்களை உற்பத்தி செய்ய, அதன் சாகுபடி முறை உள்ளிட்டவைகளை பயிற்சியளித்து ஊக்குவிக்க வேண்டும். வேளாண் ஏற்றுமதி சேவை மையத்தை சென்னை கிண்டிக்கு பதிலாக தஞ்சையில் அமைக்க வேண்டும் அல்லது சேவை மைய கிளையை தஞ்சையில் உருவாக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை வேளாண் பணிக்கு பயன்படுத்த வேண்டும். கூட்டுறவு ஒத்திவைப்பு கடன்களை தள்ளுபடி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் நுண்ணூட்ட உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும். திருவாரூர் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகைகளை வழங்கிடவும், ஆலை நிர்வாகம் பெற்ற கடன் வலையில் இருந்து விவசா யிகளை விடுவித்திடவும் வேண்டும். அறிஞர் அண்ணா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கடன் மற்றும் இணை மின்சார திட்டத்திற்கு செல விட்ட தொகையை மாநில அரசு ஏற்க வேண்டும். போதுமான ஊழியர் களை நியமிக்க வேண்டும். எத்தனால் தயாரிப்பு மையம் அமைத்திட வேண்டும். பழைய கரும்பு சாகுபடி பகுதி எல்லைகளை அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு மாற்றிட வேண்டும். விவசாயிகளின் வாழ்நி லையை எடுத்துரைக்கும் திரைப்படம் மற்றும் குறும்படங்களுக்கு வேளாண் துறை சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்”. இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.