தஞ்சாவூர், ஏப்.22 - தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன், ஆறுகள், பாசன வாய்க்கால் களை விரைந்து தூர்வார வேண்டும் என வலி யுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித் தார். அம்மனுவில், ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கான ஏற்ற சூழ்நிலை தற்போது உள்ளது. ஆனால் இடையில் மே மாதம் மட்டுமே உள்ள சூழ்நிலையில், இது வரை தூர்வாரும் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இது கடந்த ஆண்டுகளை போலவே நீர் பாய்ச்சுவதும், வடிகால் பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, தற்போது அணை யில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு தூர்வாரிட வேண்டும். எனவே, துரிதமாக மே இறுதிக்குள் அனைத்து ஆறுகள், பாசன வாய்க்கால்கள், ஏரிகள், வடிகால் வாய்க்கால் களை தூர்வார உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தண்ணீர் திறந்த பிறகு தூர்வாரும் பணிகள் எப்போதும் முழுமையாக நடைபெறு வதில்லை. எனவே, இதனை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகளை விவசாயி கள் குழுக்கள் அமைத்து, அதன் கண்காணிப் புடன் நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.