districts

img

தனியார் பள்ளிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 15-  தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என  வலியுறுத்தி இந்திய மாணவர்  சங்க மாவட்டச் செயலாளர் ச.பிரபா கரன் தலைமையில், மாநில துணைச்  செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜூன், கீர்த்தி வாசன் ஆகியோர் தஞ்சாவூர்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவ குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “தஞ்சை மாவட்டத்தில், உள்ள பல தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வருவதால் பெற்றோர்கள் பெரும்  சிரமத்திற்கு ஆளாகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இணையவழியில் பாடம் நடத்துவதற்கு, அரசு பாதிக் கட்டணம் கட்டினால் போதும் என்று வழி காட்டியது. ஆனால், இந்த கல்வி ஆண்டில்  கொரோனா காலகட்டத்தில் கட்டப்படாத, முழுத் தொகையையும் இப்போது சேர்த்துக்  கட்ட வேண்டும் என்று பல தனியார் பள்ளிகள்  பெற்றோர்களை நிர்ப்பந்தம் செய்கின்றன.  மேலும், பல அரசு பள்ளிகளில் அடிப்படை  வசதிகள் போதுமானதாகவும் இல்லை. பள்ளி கள் திறந்த பிறகும் அசுத்தமாகவே உள்ளது.  எனவே, உடனடியாக பள்ளிகளில் சீரமைப்பு  பணியினை துவங்கிட வேண்டும். அரசு அங்கீ காரம் இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளி களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.