தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சை அன்னை சத்யா விளை யாட்டு மைதானத்தில், தேசிய விளை யாட்டு தினத்தை முன்னிட்டு திங்கட் கிழமை ஹாக்கி விளையாட்டுப் போட்டியை துவங்கியது. இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக நாடு முழு வதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக் கான ஹாக்கி விளையாட்டுப் போட் டியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.