தஞ்சாவூர், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயரா மன், அதிராம்பட்டினம் தொழில் அதிபர் (seapol logistics) அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் செயலாளர் எம்.எஸ்.ஷிகாபுதின், அதி ராம்பட்டினம் யுனைடெட் பவுண்டேஷன் செயலாளர் அ. அப்துல் ரசாக் ஆகியோர் திருச்சியில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில், கூடுதல் ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா மற்றும் ரயில்வேத் துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினர். அப்போது, காரைக்குடி - திருவாரூர் வழித்தடத் தில் இரவு நேர மற்றும் பகல் நேர விரைவு ரயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும். மதுரை, ராமேஸ்வ ரம், திருநெல்வேலி பகுதிகளுக்கு ரயில் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ரயில் பயணிகள் சங்க, பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இத்தடத்தில் தேவையான அளவு ரயில்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாகவும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை யில் உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணு வத்தினரை இரவு நேரப் பணிக்கு, பணியமர்த்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.