தஞ்சாவூர், நவ.16- உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிச.3-ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந் தைகளை, மனதளவிலோ, உடல் அளவிலோ மற்றவர்கள் வருத்தப்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள இடையாத்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி.வெற்றி வேலன் தலைமை வகித்தார். இடையாத்தி ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண் மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேரணி பள்ளியில் தொடங்கி மந்திக்கோன்விடுதி சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியது. பேரணி யில் கலந்து கொண்ட மாணவர்கள் பதாகை களை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர் கா.கலாராணி கலந்து கொண்டார்.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற அல்லிகொடி அசைத்து துவக்கிவைத்தார். பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர் களுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடந் தது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேர ணியை பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலை வர் பூங்குழலி கபிலன், பள்ளி மேலாண் மைக் குழுத் தலைவி லட்சுமி பிரியா தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்ப் பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தி யபடி பேரணியாக சென்றனர். ராஜகோபால புரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளா கத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலை யத்தில் நிறைவடைந்தது.