தஞ்சாவூர், ஆக.24 - பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி புதன்கிழமை பட்டுக்கோட்டையில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரி நிறுவனருமான மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டு, மாணவ, மாணவியர்களிடம் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களும், கல்லூரி மாணவ, மாணவியர்களும் கலந்து கொள்ளும் மாரத்தான் நிகழ்ச்சி மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். மாரத்தான் நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பாலி டெக்னிக் கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை சரக துணை காவல் கண்காணிப்பாளர் பிரிதிவிராஜ் சவுகான் தலை மையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பேருந்து நிலையம், மணிக்கூண்டு, அறந்தாங்கி முக்கம், சாமியார்மடம், பாளையம் வழியாக பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறைவடைந்தது. 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு, சுழற்கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.