தஞ்சாவூர், அக்.10 - தஞ்சை மாவட்ட நிர்வா கம், தஞ்சை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணியை, தஞ்சை ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி ரயிலடி யில் தொடங்கி, அண்ணா நூற்றாண்டு மண்டபம் வரை நடைபெற்றது. இதில், பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், மன்னர் சர போஜி கலை மற்றும் அறி வியல் கல்லூரி, பான் செக் கர்ஸ் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற் பட்ட தன்னார்வலர்கள் ஊர்வலமாக சென்றனர். பேரணியில், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராம நாதன், மாநகராட்சி ஆணை யர் சரவணகுமார், ஊராட்சி உதவி இயக்குநர் சங்கர், வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி
பேராவூரணி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற பிளா ஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணி பேரூராட்சி அலு வலகத்தில் தொடங்கி, முதன்மைச் சாலை, பெரி யார் சிலை வழியாக, பேருந்து நிலையம் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவ லகத்தில் நிறைவடைந்தது.
பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சி யார்கோயில் ஊராட்சியில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் தமிழக அர சால் தடை விதிக்கப்பட்டு உள்ள ஒருமுறை பயன்ப டுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்ப டுத்தக் கூடாது என வலியுறுத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராம கிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாண வர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணிக்கு நாச்சி யார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமா சங்கர் தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ், ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர் ராஜாராமன், நாச்சியார் கோயில் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாச்சியார் கோயில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதித்தல் தொடர்பாக வணிகர்களுடன் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.