தஞ்சாவூர், ஜூன் 25- குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் மானியத்தில் பெற உழவன் செயலியில் பதிவு செய்ய லாம் என பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் என். செல்வநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பேராவூரணி வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவத்தில் நாற்றங்கால் விடும் பணி முனைப்புடன் நடைபெற்று வரு கிறது. தமிழக அரசு குறுவை சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியத்தில் இடுபொருட்கள் விநியோகம் செய்திட குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்து உள்ளது. கடைமடை பகுதியான பேராவூரணி வட்டாரத்தில் நாற்று விடப்பட்டு தற்பொழுது நடவுப் பணிக்கு நடவு வயல்கள் தயாராகி வருகின்றன. பேராவூரணி வட்டாரத்தில் இதுவரையில், டிபிஎஸ்.5 என்ற குறுகிய கால ரக நெல் விதைகள் 5,250 கிலோ விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் 2,100 கிலோ தற்பொழுது இருப்பில் உள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தில் விதைக் கிராம திட்டத் தின் கீழ் ஏக்கர் ஒன்றுக்கு 20 கிலோ சான்று பெற்ற நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், குறுவை சாகு படிக்கு தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்கள் பேராவூரணி, அம்மையாண்டி, பைங்கால், திருச்சிற்றம்பலம், அலிவலம் மற்றும் பூவாளூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு, 100 விழுக்காடு மானியத்தில் விநி யோகம் செய்யப்படவுள்ளன.
விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளமைக்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே ரசாயன உரங்கள் வழங்கப்படும். இது மட்டுமின்றி மாற்றுப் பயிர் சாகுபடி முறையில் சிறு தானி யங்கள், உளுந்து போன்ற பயிர்கள் சாகுபடி செய்திட சான்று பெற்ற விதைகள், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் சாகுபடிக்கான ஊக்கத் தொகை யாவும் வழங்கப்பட வுள்ளன. ஊக்கத் தொகையினை தங்களது வங்கி கணக்கில் வரவு வைத்திட ஏதுவாக வங்கி பாஸ்புத்தக நகல், இதர ஆவணங்களை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆகையினால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெற உழவன் செயலியிலோ அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களை சந்தித்தோ தங்களது பெயர்களை முன்பதிவு செய்து பயனடையலாம்” என தெரிவித்து உள்ளார்.