districts

வாகன பொது ஏல அறிவிப்பு

சேலம், டிச.13- சேலம் மாநகரத்தில் பல்வேறு வழக்குகளில் பறி முதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விடப் படுவதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சு.செந்தில் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ் நாடு மதுவிலக்குச்சட்டம் 14 (4) ன் படி 8 நான்கு சக்கர வாக னங்கள் மற்றும் 44 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 52  வாகனங்கள் தமிழ்நாடு அரசு ஆணைப்படி டிச.22ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகரம், குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை குமாரசாமிப் பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் டிச.20ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.  இதில், இரு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.10 ஆயிரமும் டிச.21ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேலம் மாநகரம், லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனு மதிக்கப்படுவார்கள்.

வாகனத்தினை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதை யும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு காவல் துணை ஆணையாளர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம் அல்லது காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல்பிரிவு சேலம் மாந கரம் அலுவலகத்தினை நேரடியாகவோ, மதுவிலக்கு அமல் பிரிவு தொலைபேசி எண் 0427 2431200 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.