districts

img

சேலம் : நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.1- நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்கு நரின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் எடப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் தொழிற்சங்க விரோ தப் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறார். இவரின் செயலை கண்டித்தம், முதன்மை இயக்குநர் பணியிடத்திற்கு இந் திய ஆட்சிப் பணி அலுவலரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி எடப்பாடி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் செல்வம் தலைமை வகித் தார். இதில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.