சேலம், ஜூன் 12- சமூக விரோதிகளுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்களை உடனடியாக பணி யிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி, சேலம் மாநகர துணை ஆணையரி டம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்த னர்.
சேலம் மாநகரம் முழுவதும் பரவியுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சட்ட விரோத மதுவிற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும். சமூகவிரோதிகள் நடமா டும் பகுதிகளை அடையாளப்படுத்தி கூடுதல் காவலர்களை ரோந்து பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மாநகரின் பல பகுதிகளில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. அதனை சீர் செய்வதோடு, சமூக விரோதிகள் நடமா டும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். சமூகவிரோதிகளுடன் தொடர்பில் உள்ள காவலர்களை கண்டறிந்து, அவர் களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். சமூகவிரோத செயல்களை கட் டுப்படுத்திட, எவ்வித அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் சட்டப்படி கடமையை செய்வதை உறுதி செய்து, பொதுமக்கள் தரும் புகார் மனுக்களை முறையாக பதிவுசெய்து தட்டி கழிக்காமல் விரைவில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண் டும். காவல் நிலைய வரவேற்பாளர், மாநகர காவல் உளவுப்பிரிவு காவலர் ஆகியோர், காவல் நிலைய அதிகாரிகளுடன் கைகோர்த்து கொண்டு, உயரதிகாரிகளுக்கு முறையான தகவல்களை அனுப்பாமல் மறைத்திடுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணனிடம் மனு அளித்தனர்.
இந்நிகழ்வில், சிபிஎம் சேலம் வடக்கு மாந கரச் செயலாளர் என்.பிரவீன்குமார், மாநகரக் குழு உறுப்பினர் வி.வெங்கடேஷ், கிளைச் செயலாளர் வி.சரவணன் மற்றும் கே.நாக ராஜ், எம்.வெங்கடேஷ் ஆகியோர் உடனி ருந்தனர்.