அறந்தாங்கி, செப்.8 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் பழமையான வீரமாகாளி யம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடந்து கடந்த செப். 5 ஆம் தேதி யாகவேள்வி தொடங் கியது. தொடர்ந்து ஆறு கால பூஜை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நடந்தது. பின்னர், கடம் புறப்பட்டு கோபுரத்தை அடைந்து, கோயில் ஸ்தானிகர்கள் ரவிச்சந்திரன், குமரகுருமூர்த்தி குருக்கள் முன்னிலையில் பிள்ளையார்பட்டி விகாஸ்ரத்னா டாக்டர் பிச்சை சிவாச்சா ரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பி னர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், அறக்கட்டளை தலை வர் கோவிந்தசாமி, செயலாளர் முத்து சுப்ரமணியன், பொருளாளர் அய்யா கண்ணு, நகராட்சி தலைவர் ஆனந்த், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முக நாதன், அறநிலையத்துறை இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர் அனிதா, கோயில் செயல் அலுவலர் முத்துகுமரன், ஆய்வாளர் திவ்யபாரதி மற்றும் கவுன்சிலர்கள் கோ.துளசிராமன், ஸ்ரீவித்யா, விஸ்வ மூர்த்தி, காசிநாதன், கிருபா, மங்கையர் கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.