அறந்தாங்கி, பிப்.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சிகரம் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் தேர்வாகி உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறந்தாங்கி இந்திய மருத்துவ சங்க அரங்கில் பாராட்டு விழா நடை பெற்றது. அறந்தாங்கி இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செய லாளர் டாக்டர் இப்ராம்ஷா மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ்ராஜ் வரவேற்றார். 2018 ஆம் ஆண்டு தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு தவிர்த்து, அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கு இலவச நீட் பயிற்சி மையத்தை அறந்தாங்கி இந்திய மருத்துவ சங்கம் மற்றும் திசைகள் மாணவ வழி காட்டு அமைப்பு இணைந்து ஆரம்பித்தன. அந்த ஆண்டில் பயின்ற 54 மாணவர்களில், 9 பேர் தேர்ச்சி பெற்றனர். 2019 ஆம் ஆண்டில் பயின்ற 104 மாணவர்க ளில் 17 பேர் தேர்ச்சி பெற்றனர். 2020 ஆம் ஆண்டு பயின்ற 19 மாணவர்களில் 9 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு பயின்ற 100-க்கும் மேற்பட்டோரில் 3 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. நாகராஜன், ஷம்ஷியா அப்ரினுக்கு எம்பிபிஎஸ் சீட்டும், நிஷாவிற்கு பிடி எஸ் சீட்டும் கிடைத்தன. இவர்களுக்கு பாராட்டு விழாவும், நீட் பயிற்சி மையத் திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒருங்கிணைந்து நடத்தப்பட் டது. தமிழ்நாடு ஐஎம்ஏ செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் புதுக்கோட்டை டீம் மருத்துவமனையின் நிறுவனர் மரு. சலீம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மூன்று மாணவர்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அறந்தாங்கி ஐஎம்ஏ சார்பில் வழங்கப்பட்டது. டாக்டர் சலீம் தனது பங்காக நிதி அன்பளிப்பை மாணவர்களுக்கு வழங்கி னார். திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சற்குருநாதன் நன்றி கூறினார்.