உதகை, டிச.15- கூடலூர் அருகே அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து காட்டு யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. இத னால் மனித- வனவிலங்குகள் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள் ளன. குறிப்பாக, கடந்த 2 மாதத்தில் மட்டும் காட்டு யானை தாக்கிய தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொளப்பள்ளி அருகே ஞாயிறன்று இரவு காட்டு யானை தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந் தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யானை தாக்கிய தில் உயிரிழந்தோர் குடும்பத் திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
குடியிருப்பு பகுதிக ளுக்குள் யானைகள் நுழையாமல் இருக்க அகழிகளை ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று அனைத்து அரசியல் கட்சி யினர், அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து மாவட்ட வரு வாய் அலுவலர் நிர்மலா முன்னி லையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இரண்டு முறை நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தராஜ் என்பவர் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக, இந்த பேச்சு வார்த்தையின் போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பொந்தோஷ், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.எம்.ஹனீபா மாஸ்டர், திமுக மாவட்டச் செயலாளர் ப.முபாரக், சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், எருமாடு இடைக் கமிட்டி செயலாளர் கே.ராஜன், விசிக மாவட்டச் செயலாளர் சகாதேவன், தோட்ட தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் பொ.ரமேஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.மணிகண்டன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.