districts

img

தரக்குறைவாக பேசும் அரசுக்கல்லூரி முதல்வர்

விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நாமக்கல், பிப்.19- கௌரவ விரிவுரையாளர்களை மரி யாதைக் குறைவாகவும், உரிய நேரத் தில் சம்பளம் வழங்காமல் பழிவாங்கும் அரசு கலைக்கல்லூரி முதல்வரை கண் டித்து, விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக் கல்லூரியில் சுமார் 24 கௌரவ விரிவு ரையாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இந்த விரிவுரையாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி காலை 12.20 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தர வுள்ளது. மேலும், மாதத்தில் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், விரிவுரையாளர்கள் 12 மணிக்கு கல்லூரிக்கு வந்தால், அவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து தகாத  வார்த்தைகளில் பேசியும் அவமானப் படுத்தும் வகையிலும், கல்லூரியின் முதல்வர் ரேணுகா நடந்து வருவதாக விரிவுரையாளர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். மேலும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வழங்குவதால், தங்கள் வாழ் வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி, விரிவுரையாளர்கள் புதனன்று கல்லூரி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.