தூத்துக்குடி,செப் 15 இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 9ஆவது மாநாடு தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடை பெற்றது. மாநாட்டின் முதல் நாள் இந்திய மாணவர் சங்கத்தின் வரலாறு என்ற தலைப்பில் மாநிலத் துணை தலைவர் ம.கண்ணன் பேசினார். மாணவர் சங்க நடைமுறை பணிகள் என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் ஜாய்சன் பேசி னார். மாலையில் அமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் மத்திய குழு உறுப்பினர் சத்யா பேசினார். இரண்டாம் நாள் பிரதிநிதிகள் மாநாடு மாவட்ட தலைவர் ஸ்ரீநாத் கொடியேற்றத்துடன் துவங்கியது. மாணவர் சங்க தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்புரையாற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் பிரகாஷ் துவக்க உரை யாற்றினார். மூட்டா அமைப்பின் மாவட்ட செயலாளர் சிவஞா னம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பூமயில், மாணவர் சங்க மத்தியகுழு உறுப்பினர் சத்யா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பின்னர் மாவட்ட செயலாளர் ஜாய்சன் வேலை அறிக்கையை முன் வைத்தார். விவாதத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். புதிய மாவட்டத் தலைவராக கார்த்திக், மாவட்ட செய லாளராக மாரிச்செல்வம் உள்ளிட்ட 31 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத் தலைவர் ம.கண்ணன் நிறைவுரை ஆற்றினார். செயலாளர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.