தூத்துக்குடி, டிச. 6 தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை வெளியேற்றக் கோரி பல்வேறு பகுதிகளில் மாதர் சங்கத்தினர், பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதி களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மின் மோட்டார், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டா லும் சில குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாமல் உள்ளது. குறிப்பாக மாநகர பகுதியில் சில இடங்களில் 10 நாட்களாகியும் தண்ணீர் வடியவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட் சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம், ஆ.சண்முகபுரம், பவிஸ்ரீ நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வலி யுறுத்தி ஆ.சண்முகபுரத்தில் தருவைகுளம் பிரதான சாலை யில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி மாதா நகர் 6ஆவது தெரு பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனே அகற்றக்கோரி சோட்டையன் தோப்பு பகுதியில் தூத்துக்குடி - ராமேஸ்வரம் பிர தான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகை யில், மாதா நகர் 6-ஆவது தெரு வில் 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி இருப்பதாக வும், மழை நீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தண்ணீரை உடனே அகற்றி னால் மட்டுமே மறியலை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். மறி யலின் போது, அந்த வழியாக வந்த அமரர் ஊர்திக்கு பொது மக்கள் வழி கொடுத்துவிட்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், தனசேகரன் நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி, ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரை அகற்ற கோரி மாதர் சங்கத்தினர் எட்டையபுரம் சாலை, மாவட்ட கூட்டுறவு வங்கி அருகே மறிய லில் ஈடுபட்டனர். பின்னர் தூத்துக்குடி வடக்கு மண்டல துணை ஆனையர் தலை மையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திங்கள் மாலைக் குள் கூடுதல் மோட்டர் பம்புகள் மூலம் வெள்ள நீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கபட்டது. இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமயில், மாவட்ட துணைச் செயலாளர் கமலம், தனசேகரன், நகர் கிளைச் செய லாளர் கமலபுஷ்பம், சிஐடியு சார்பில் டென்சிங், தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.