districts

மதுரை விரைவு செய்திகள்

புகார் அளித்த விவசாயியை தாக்கிய அதிகாரி கைது

திருவில்லிபுத்தூர், மே 14- திருவில்லிபுத்தூர் அத்திகுளம் காலனி தெருவில் வசிப்பவர் மாடசாமி (வயது 64) , விவசாயி. இவர் வசிக்கும் பகுதியில் ஓய்வுபெற்ற மின் துறை அதிகாரி ஆபிரகாம் சத்தியசீலன் (வயது 64) என்பவர் மின் வாரியம் மூலம் வீடுகளுக்கு பழைய மீட்டரை எடுத்துவிட்டு புதிய மீட்டர்  வைப்பதற்காக பணம் வசூல் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாடசாமி திருவில்லிபுத்தூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். இதனால் மாடசாமி, ஆபிர காம் சத்தியசீலன் ஆகியோருக்கு இடையே பகை ஏற்பட்  டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாடசாமி திருவில்லிபுத்தூர் கீழ ரதவீதியில் டீ கடைக்கு எதிரே நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஆபிரகாம் சத்தியசீலன் மாடசாமியை சாதி குறித்து இழி வாக பேசி செருப்பால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்  துள்ளார். இதுகுறித்து மாடசாமி தந்த புகாரின் பேரில் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாம் சத்தியசீலனை கைது செய்தார்.


தரமற்ற முறையில் வீட்டை  கட்டிக் கொடுத்தவருக்கு அபராதம்

இராஜபாளையம், மே 14- இராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜநாராயணன் என்பவருக்கு வீடு கட்டி தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டு,  துரைராஜ் என்பவர் 26-05-2017 அன்று வீடு கட்டி முடித்து ஒப்படைத்துள்ளார். அதற்கு பின் ஒரு சில மாதங்களில்  கட்டிடங்களில் சுற்றுச்சுவர், நல்லதண்ணீர் தொட்டி மற்றும் மேல்நிலை தொட்டி ஆகியவை தரமற்ற முறையில் கட்டித்  தரப்பட்டுள்ளது குறித்து ராஜநாராயணன் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சேகர், இது சேவைக் குறை பாடு ஆகும். சேவை குறைபாட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய்,  மன உளைச்சலுக்கு 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை துரைராஜ் வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டார். மேற்படி தொகைகளை இந்த உத்தரவு பிறப்பித்த ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டுமென்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மே 17,20 இல் மாற்றுத்திறனாளிகள்  சிறப்பு குறைதீர் முகாம்

இராமநாதபுரம், மே 14-  இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திற னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில்,அவர்களுக்கான சிறப்பு குறை தீர் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. மே 17 அன்று காலை 10.30 மணியளவில் பரமக்குடி வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மே 20 அன்று  காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்திலும் ‘மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்’ நடைபெற உள்ளது. துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ளும் இக் கூட்டத்தில், அந்தந்த கோட்டப் பகுதியைச் சார்ந்த மாற்றுத்  திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை களை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

விருதுநகர், மே.14- விருதுநகர் மாவட்டம், திருச்சுழியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(40). இவரை மதுரை மாவட்டம், பெருங்குடி யைச் சேர்ந்த செல்வக்குமார் (37) என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சத்தியமூர்த்தி உயிரிழந்தார். எனவே, செல்வக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி குண்டர் சட்டத்  தில் செல்வக்குமாரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.