தேனியில் மக்கள் கூடும் இடத்தில் உள்ள மதுபானக்கடையை இடமாற்றம் செய்க! ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
தேனி, ஜூன் 16- தேனி அல்லிநகரத்தில் மக்கள் கூடும் இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மது பானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேனி ஆட்சியரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்க டேசன், சி.முருகன் ,தாலுகா செயலாளர் இ.தர்மர் ஆகி யோர் தேனி ஆட்சியர் க.வீ. முரளீதரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித் துள்ளதாவது: தேனி அல்லிநகரம் கூட்டு றவு சங்கம், இரண்டு நியாய விலை கடைகள், மண் ணெண்ணெய் பங்க் என பெண்கள், முதியவர்கள் என மக்கள் கூடும் பெரியகுளம் சாலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் கடை எண் 8613 கொண்ட டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திறக் கப்பட்டு, அதன் மூலம் சட் டம் -ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு, பெரும் போராட் டத்திற்கு பின் மதுக்கடை மூடப்பட்டது. டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள் ளதால் பொதுமக்கள் ,பெண் கள் என பலதரப்பட்ட மக்க ளும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே மதுக் கடையை அகற்றி இடமாற் றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.
தனியார் கல்லூரி விடுதியில் உணவு வழங்காததால் மாணவ, மாணவிகள் மயக்கம்
வேடசந்தூர், ஜூன் 16- வேடசந்தூர் அருகே தனி யார் வேளாண்மை கல்லூரி விடுதியில் காலை உணவு வழங்காததால் 13 பேர் மயக் கமடைந்து அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டையில் எஸ்.ஆர்.எஸ். என்ற தனியார் வேளாண்மை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கிறார்கள். வியாழனன்று காலை 7 மணிக்கு வகுப்பு தொடங்கப்பட்டு காலை 9 மணிக்கு முடிந்தவுடன் முத லாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கு வதற்கு தாமதமானது. இதனால் நித்திய குமார்(18), சோபனா(18), கோகுல்நந்தினி(18), நிவேதா(18), சங்கரி(19), தமிழரசி(19) உள்ளிட்ட 13 பேருக்கு லேசான மயக்கம் ஏற்ப்பட்டது. உடனடியாக 13 பேரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்க்கப் பட்டனர். இதில் 7 பேர் மட்டும் சிகிச்சை பெற்று கல்லூரி திரும்பினர். 6 மாணவ, மாண விகள் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரிய சாமி தலைமையில் அக்கட்சி யினர் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் மாணவ, மாணவிகளை சந் தித்தனர். தனியார் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி ஆர்.டி.ஓ. விசாரணை
இந்நிலையில் வேடசந் தூர் அரசு மருத்துவ மனைக்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் வந்து, சிகிச்சை பெற்றுவரும் மாணவ, மாண விகளிடம் நடந்த சம்ப வத்தை விசாரித்தார். அப்போது விடுதியில் சரியான உணவு வழங்கு வதில்லை. அதையும் குறித்த நேரத்தில் வழங்காததால் மயங்கியதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
நாளை இராமநாதபுரத்தில் தமுஎகச கலை இலக்கிய இரவு
இராமநாதபுரம், ஜூன் 16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் இராம நாதபுரம் மாவட்ட ஒன்பதாவது மாநாடு மற்றும் கலை இலக்கிய இரவு சனிக்கிழமை அன்று இராமநாதபுரம் ரோசரி மன்றம் தோழர் அறிவழகன் நினைவு அரங்கம் மற்றும் அரண்மனை முன்பாக நடைபெறுகிறது. மாநில துணைப் பொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன் துவக்க உரையாற்றுகிறார். மாநில துணைப் பொதுச் செயலாளர் வேலாயுதம் நிறைவு செய்து உரையாற்றுகிறார் . அரண்மனை முன்பாக வரவேற்புக் குழுத் தலைவர் ஆர் .குருவேல் தலைமையில் இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி கலை இரவு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார். முன்னதாக சர்ச் அருகில் இருந்து கலை பேரணியை நகர் மன்றத் தலைவர் ஆர்.கே.கார்மேகம் துவக்கி வைக்கிறார் . பேராசிரி யர் இரா. காளீஸ்வரன்,தேனி வசந்தன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். டாணாக்காரன் திரைப்பட இயக்குனர் தமிழ் பங்கேற்கிறார். மாவட்ட செயலாளர் வான் தமிழ் இளம் பரிதி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, சிலம்பொலி கிராமிய கலை குழு, நெருப்போடு விளையாடும் லிம்போ கேசவன், உடுமலை துரையரசன், முகவை அலைகள் மற்றும் எம்.ராஜ்குமார், சர்புதீன், வெண்மணி நட ராஜன், வைகை கோமதி பாடல்கள் இடம்பெறுகின்றன.
தனியார் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு பயிற்சி எனக்கூறி அதிக கட்டண வசூல்: எஸ்எப்ஐ புகார்
திண்டுக்கல், ஜுன் 16- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வா கங்கள் தனியார் பள்ளி கட்டண ஒழுங்கமைப்பு குழு நிர்ண யித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருவதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கம் புகார் மனு அளித்துள்ளது. இது தொடர்பாக மாவட்டச்செயலாளர் கே.முகேஷ் கூறுகை யில், திண்டுக்கல்லில் உள்ள எஸ்.எம்.பி. பள்ளி, அக்சயா வித்யாலயா, பார்த்தி, மகரிஷி, வித்யா மந்திர், நிலக்கோட் டையில் கே.சி.எம். யில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்று கூறி 6 ஆம் வகுப்பு முதலே அதிக கட்டண வசூல் செய்து வருகிறார்கள். நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர் பள்ளியில் மாணவர்கள் செலுத்திய முழு கட்டணத்திற்கும் ரசீது வழங்கப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டின் போது பொதுத்தேர்வு நடைபெற இருந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் உடனடியாக கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று மாண வர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் மனரீதி யாக துன்புறுத்தினர். அப்போது இந்திய மாணவர் சங்கம் புகார் அளித்தது. எனவே கல்விக்கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நடத்தும் வசூல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அதே போல் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமலாக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் வசூலிப்பதையும் தடுத்திட வேண்டும். நாகைய கோட்டை ஹாஜி காதர் மிர்சா நினைவு மேல்நிலைப்பள்ளியில் பி.பி.ஓ வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் சிரமப்படு கிறார்கள். எனவே வகுப்பறைகளை அமைப்பதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (நநி)