சின்னாளப்பட்டி, அக்.7- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்தி ரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டரசன் பட்டி என்ற கிராமத்தின் அருகில் செம் பட்டி- ஒட்டன்சத்திரம் சாலை போடப்படா மலும், மராமத்து பணி செய்யாமலும் அதி காரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஒன்றியச் செய லாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.