மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 538 உயர்க்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000, வங்கி கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டை அடங்கிய தொகுப்புகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஷ் சேகர் தலைமையில் வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.