மதுரை, செப். 4- கீழடியில் சங்கக்கால தமி ழர் நாகரிக தொல்லியல் அடையாளங் களை கண்டறிந்து உலகறி யச் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இந்திய தொல்லியல் துறையின் தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப் பாளராக பணியாற்றி வந்த அவரை தற்போது இந்திய தொல்லியல் துறை (ASI)யின் இயக்குநராக ஒன் றிய அரசு நியமித்துள்ளது.