districts

img

தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அடையாளமான ஜல்லிக்கட்டை பாதுகாக்க கரம் கோர்ப்போம் சு.வெங்கடேசன் எம்.பி., அழைப்பு

மதுரை, நவ.6-  தமிழ்ச் சமூகத்தின் பண்டைய அடையாளத்தை பாதுகாக்க கரம் கோர்ப்போம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அழைப்பு விடுத் துள்ளார். ஜல்லிக்கட்டு பேரவையின் 16  ஆவது பொதுக்குழு கூட்டம் மதுரை மேலமடையில் உள்ள ராஜ் பாலா மண்டபத்தில் சனிக் கிழமையன்று  பேரவையின் தலை வர் பி. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலா ளர் ஆர். எம். நாராயணன் மற்றும் அமைச்சர் பி. மூர்த்தி மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், கே. ராஜேந்திரன் உள்பட தமிழகம் முழுவதுமிருந்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: தமிழ்ச் சமூகத்தின் பண் பாட்டிற்கு ஒரு முத்தாய்ப்பான அடையாளம் எதுவென்றால்  திமி ருகின்ற காளையும் அதை பிடிக்  கும் வீரனும்தான். ஜல்லிக்கட்டை இந்தியாவுக்கு மட்டுமல்ல உல கத்துக்கே எடுத்துக்காட்டியது நம் முடைய தமிழ்ச் சமூகம். 2006 ஆம் ஆண்டு முதல் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். கலித்தொகையில் உள்ள ஒரு  பாடலை பேராசிரியர் தொ. பரமசிவ னிடம்  கேட்டு வாங்கி அதை ஆவ ணப்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து மிகப்பெரும் போராட்டத்தை நாம் ஜல்லிக்கட்டிற்காக நடத்தி வந்  துள்ளோம். 2016 ஆம் ஆண்டு முதல் வழக்குகளை சந்தித்து வரு கின்றோம். அப்படி ஜல்லிக்கட்டு எனும் நெருப்பை அணைய விடா மல் பாதுகாத்து வரக்கூடியது இந்த  ஜல்லிக்கட்டு பேரவை. இதற்கு  முன் பீட்டா என்கின்ற அமைப்பு  ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடியது. இப்போது “கூபா” என்ற அமைப் பின் வடிவில் வந்துள்ளது. புதிதாக ஐந்து  நீதிபதிகள் கொண்ட அமர்  வில் ஜல்லிக்கட்டு வழக்கு விசார ணைக்கு வருகின்றது.  வழக்கின் கடைசி கட்டத்தில் இருக்கின்றோம். சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும்  நாம் இப்போது போராட வேண் டிய சூழ்நிலை உள்ளது.  தமிழக முதல்வரை நேரில் சந்  தித்து ஜல்லிக்கட்டை சட்ட ரீதி யாக பாதுகாப்பதற்கான நடவ டிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு கோரிக்கை முன் வைத்துள்ளோம்.  சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டை பாதுகாப்பதற்கு தமிழக அரசு  முழு ஒத்துழைப்பு வழங்கும் என்ற நம் பிக்கை உள்ளது.  அந்த வழக்கை சந்திக்கும் நபராக ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் இருப்பார். ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு சந்தித்துள்ள ஒவ்வொரு பிரச்ச னைகளையும் சட்ட  நிபுணர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அதை எடுத்துக் கூறியுள்ளார்.  

மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அந்த வழக்கில் என்னையும் இணைத்துக் கொள்வதற்கான வேலைகளை தற்போது செய்து  கொண்டிருக்கின்றேன் உங்களு டைய கரத்தை வலுப்படுத்தும் அள விற்கு உங்கள் கரத்தோடு சேர்ந்து  போராடுவோம்.  இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில் காலம் காலமாக ஜல்லிக்கட்டு நடந்து வந்த கிரா மங்களின் பெயர்கள் பட்டியல் ஏற்கனவே  அரசிதழில்  வெளியாகி உள்ளது. எனவே அந்த அடிப்படை யில் மாவட்ட ஆட்சியர்கள், அந்த கிராமங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆணையினை வரும் காலங்களில் பிறப்பிக்க வேண்டும்.  திருப்பூர் மாவட்டம் அழகு மலையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் 2022 இல்  தனியாருக்கு சொந்தமான இடத் தில் ஜல்லிக்கட்டு நடத்தப் போதிய வசதி இல்லை என்பதால் அரசு  புறம்போக்கு இடத்தில் நடத்துவ தற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி  மறுத்து வந்தது. அழகு மலையில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு ஆவன  செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.