districts

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.1-  தமிழகத்தில் அதிக அளவில்  நெல் கொள்முதல் நிலையங்களை  அமைக்க கோரியவழக்கில் அரசு பதில்  அளிக்க உயர்நீதிமன் றம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக ரமேஷ்  என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள்  புஷ்பா சத்தியநாராயணா, வேல்முரு கன் அமர்வு முன்பு திங்களன்று  விசார ணைக்கு வந்தது. அரசு தரப்பில் தாக்கல் செய்த  பதில் மனுவில், நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்ப டும் நெல்களுக் கான தொகையை விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களை கண்கா ணிப்பதற்காக மாவட்ட அளவிலான  கண்காணிப்புகுழுவின் தலைவராக  மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ள னர். நேரடிக் கொள்முதல் நிலையங் களில் தினசரி 800 நெல் மூட்டைகள்  கொள்முதல் செய்யப்பட்ட நிலை யில் தற்போது 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நீண்ட நேரம் காத்தி ருக்க வேண்டிய சூழ்நிலை இருந்த  நிலையில் தற்போது டோக்கன் வழங் கப்பட்டு, அதில் அவர்கள் வரவேண்டிய  நேரம் குறிப்பிட்டு வழங்கப்பட்டு வரு கிறது. 2020 - 2021 ஆம் ஆண்டு  2731 நேரடி கொள்முதல் நிலையம் மூலம்  44,90,222 எம்.டி நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம்  8,52,152 விவசாயிகள் பயனடைந்துள்ள னர். மேலும் www.tncsc.edpc.in  இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு  விவசாயிகளின் செல், ஆதார், விவ சாய நிலங்கள்போன்ற விவரங்கள் பதிவு  செய்யப்பட்டு நெல் கொள்முதல் செய் யப்பட உள்ளது. இதுகுறித்த விழிப்பு ணர்வை விவசாயிகளிடம் மாவட்ட  ஆட்சியர் ஏற்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை கள் 48 மணி நேரத்தில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட கிடங்குகளில் வைப்ப தற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்களை  பாதுகாக்க கூடுதலாக அரசு கிடங்கு கள், கூட்டுறவு கிடங்குகள் ஆகியவை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்  கொள்முதல் தொடர்பான சந்தேகங் களை களைவதற்காக இலவச தொலை பேசி எண் வழங் கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள்,  அரசு பதில்மனுவை மனுதாரருக்கு  வழங்க உத்தரவிட்டு வழக்கு விசார ணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத் துள்ளனர்.