கிருஷ்ணகிரி, மார்ச் 18- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்ட பழங்குடி மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரப் பயணம், காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் இருந்து பிரிக்கப்பட்டு மலைகளின் நடுவில் தனி வட்டமாக அஞ்செட்டி அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்து விட்டது. வறண்ட நிலப் பகுதியான இங்கு 25 ஊராட்சி களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 90 விழுக்காடு தலித், பழங்குடி, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆவார். ஆனால் பேருந்து நிலையம், கழிப்பறை வளாகம், வட்ட மருத்துவ மனை என எந்த அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. . நாட்றம்பாளையம் அத்திமரத்துர் குறுவிழா ஏரி வட்டம், கேரட்டி, சிவலிங்க புரம், தலித், பழங்குடி, மக்கள் காலனிகள் உள்ளிட்ட கிராமங்களில் வீடு கட்டி பல தலைமுறைகளாக வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா இதுவரை வழங்க வில்லை. இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ், பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுக்கப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அஞ்செட்டி பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரியும், பட்டா கேட்டும் தொகுப்பு வீடு களை சீரமைக்கக் கோரியும், தலித் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு சாதி சான்று வழங்கக் கோரியும் கடந்தஆண்டு இரண்டு முறை போராட்டம் நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஒரு மாதத்தில் பிரச்சனை கைள் தீர்க்கப்படும் என்று அப்போது அதிகாரி கள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நாட்றம்பாளையம், அத்திமரத்துர், உரிகம் எருமத்தனப்பள்ளி பகுதிகளில் இருந்து பிரச்சார பயணம் துவங்கி, அஞ்சட்டி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டச் செயலாளர் தேவராஜ் தலைமை யில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், பிரகாஷ் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இளவரசன், லெனின் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், அலுவலர்கள், காவல்துறையினர் பேச்சு நடத்தி இரண்டு மாதங்களுக்குள் கோரிக்கைகைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.