districts

ஒப்பந்த ஊழியர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை: சிஐடியு மனு

கரூர், பிப்.7 -  சிஐடியு சங்கத்தின் கரூர் மாவட்டச் செய லாளர் சி.முருகேசன் தலைமையில் மாவட்ட  ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், கரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு  மருத்துவமனை ஊழியர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிய மிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர் களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட காலத்தில்  ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர்  மற்றும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஆகிய 2  மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் ஊழி யர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் சிரமங்களை போக்கும்  வகையில் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர் களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம்  ஊதியம் வழங்கிட மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.