கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக் கால் கரை ஓரத்தில் உள்ள விளை நிலங்களில் மணல் படிந்தும் மணல் திட்டாக குவிந்தும் காட்சியளிக்கிறது.
பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண் ணாமலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது .‘மேலும் சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதி கரித்தது. இதனை ஒட்டி அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் நீரில் மூழ்கின.
வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்த தால் உணவு, மின் சாதனம் உள்ளிட்ட பொருட்கள், உடமைகள் சேதமடைந் தன. கடலூர் மாவட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் ஒன்றிய பகுதிகளில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்திருந்த நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, தென்னை, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வெள்ளத்தில் முழ்கி அழிந்து போனது.
வெள்ளம் வடிந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க வில்லை. பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. விளைநிலங்களில் மேடு,பள்ளங்கள் ஏற்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட ஹெக்டேரில் மணல் படர்ந்தும் பாலைவனம் போல் காட்சி அளிக்கி றது. ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்பிலிருந்து விவசாய நிலம் மீள சிலஆண்டுகள் ஆகும் என விவ சாயிகள் வேதனையோடு கூறினர்.
கண்டகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறும் போது, குண்டு உப்பளவாடி ஊராட்சிக்குட் பட்ட கண்டக்காடு மற்றும் தாழங்குடா போன்ற கிராமங்களை சுற்றியுள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தில் நெல், மணிலா, உளுந்து, வாழை, தென்னை போன்ற பயிர்கள் சாகுபடி செய்திருந்தோம்.
இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றின் கரை யோரம் உள்ள தாழங்குடா மற்றும் கண்டக்காடு கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழந்து கொண்டது. கண்டங்காடு கிரா மத்திற்கும் தாழங்குடா கிராமத்திற் கும் அதிகாரிகள் கூட வர முடியாத அள விற்கு அப்பகுதி தனி தீவு போல் காட்சி யளித்தது. இதனால் இரண்டு நாட்கள் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர் என்றார்.
விவசாயி கிருஷ்ணன் கூறும் போது, வெள்ள நீர் வடிந்த உடன் கண்டக்காடு மக்களும் விவசாயிகளும் தங்களது விவசாய நிலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விவசாய நிலம் முழுவதும் மணல் மேடாகவும், மணல் திட்டாகவும் காட்சியளித்தது. விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் மூழ்கியதுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட மணல்கள் அனைத்தும் விவசாய நிலத்தில் குவிந்து தற்போது மணல் திட்டாக காட்சியளிக்கிறது. நாங்கள் இந்த மண்ணை அகற்றிவிட்டு எப்படி விவ சாயம் செய்வது என அறியாமல் திகைத்து நிற்கிறோம் என்றார்.
விவசாயி ராமச்சந்திரன் கூறுகை யில், உச்சிமேடு, ஞானமேடு ஆகிய இரண்டு கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், கிழங்கு, கோழி கொண்டை பூ, கத்திரிக்காய், சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டி ருந்தது. வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட கரை உடைப்பால் விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளத்தால் பெரும் சேதம் அடைந்துள்ளது. நிலத்தில் மணல்மேடு திடீர் பள்ள ங்கள் ஏற்பட்டு நிலமே சிதைந்து போனது. கண்டகாடு ,உச்சிமேடு, ஞான மேடு ஆகிய மூன்று கிராமங்களிலும் விவசாய நிலங்கள் அழிந்து 5 அடி யில் இருந்து 10 அடி வரை மணல் திட்டாக மாறிவிட்டது.
இதனால் தற்போது விவசாயம் செய்ய முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என்றால் ஜேசிபி வைத்து தான் அகற்ற வேண்டும் அப்படி அகற்றி னால் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் என பல ஆயிரம் ரூபாய் வரை வாடகைக் கட்டணம் செலுத்தவேண்டி வரும். இந்த நிலையில் அரசு வழங்கும் இழப்பீடு என்ப யானைப்பசிக்கு சோள ப்பொறியை போன்றதாகும். ஆகவே மணல் திட்டுகளை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றி கொடுத்தாலே போதும் நாங்கள் மீண்டும் விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்வோம் என கூறினார்.
வெள்ள பெருக்கால் பயிர் இழப்பு மட்டும் தான் நஷ்டம் என்றால், ஒரு போக த்தை விட்டு,மறுபோகத்திற்கு சென்று விடுவார்கள். ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வந்த நிலத்தையே தென் பெண்ணை ஆற்று வெள்ள நீர் அடி யோடு புரட்டிப் போட்டுள்ளதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் ஏ.ஜே.கென்னடி ஜெபக்குமார் கூறும்போது, கடலூர் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் மழைக்கு 48,907 ஹெட்டர் நெல், 17,389 ஹெக்டர் மக்காச்சோளம், 10,393 ஹெக்டர் பயிர் வகைகள், 2,183 ஹெக்டர் கரும்பு, 506 ஹெக்டர் பருத்தி, 1,420 ஹெக்டர் வரகு என மொத்தம் 82,375 ஹெக்டர் விலை நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். வெள்ளம் வடிந்தாலும் விவசாயி களின் கண்ணீர் மட்டும் வற்றாமல் ஓடு கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரை தமிழக அரசு துடைக்குமா? உதவிக்கரம் நீட்டுமா..?