ஈரோடு, டிச. 21- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்வு ஈரோட்டில் வெகு விமர்சை யாக நடைபெற்றது. சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் படைப்புகளை தேர்வு செய்து, படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினர் கலை இலக்கிய விருது களை அளித்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், கலை அறிவியல் கல்லூ ரியில் 2023ஆம் ஆண்டுக்கான தமு எகச கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா சனிக்கிழமை யன்று நடைபெற்றது.
முன்னதாக, கல்லூரியின் முகப்பில் விருதா ளர்களுக்கு ரோஜா மலர் மாலை அணிவிக்கப்பட்டு பறை இசை முழங்க விழா நடைபெறும் திரு வள்ளுவர் அரங்கம் வரை அழைத்து செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, ஜெயந்த ஸ்ரீ தலைமையில், மாணவர்கள், வீணை இசையுடன் நிகழ்வை தொடங்கி வைத்தனர். விருதளிப்பு விழாவிற்கு தமு எகச மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டச் செயலாளர் இ. கலைக்கோவன் வரவேற்றார்.
எழுத்தாளர் ஜமாலன் கருத்துரை யாற்றினார். முற்போக்கு இலக்கிய இயக் கத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான கு.சின்ன ப்ப பாரதி அறக்கட்டளை விரு திற்கு ராஜ் கௌதமன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவர் இறப்பிற்கு முன்பே இவ்விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டி ருந்தது. ராஜ்கௌதமன் பற்றிய காணொலி விழாவில் திரையிடப்பட்டது. தொடர்ந்து தொன்மைசார் நூலான சிலப்ப திகாரமும் கண்ணகி வழிபாடும் என்ற நூலிற்கு பல.ஜெயகிருஷ்ண னுக்கு தோழர் கே.முத்தையா நினைவு விருது வழங்கப்பட்டது.
பற்சக்கரம் நாவலுக்காக எஸ்.தேவி, கே.பி.பாலச்சந்தர் விருது பெற்றார். விளிம்பு நிலை மக்கள் குறித்த படைப்பான ஊருக்கு ஒரு குடி ஆசிரியர் ஜூலியஸ், சு.சமுத்தி ரம் நினைவு விருது பெற்றார். கலை இலக்கிய விமர்சன நூலான ஈழத்தமிழரின் புலம் பெயர் இலக்கி யம் எழுதிய இரா.செங்கொடிக்கு, இரா.நாகசுந்தரம் நினைவு விருது வழங்கப்பட்டது. ச.ப்ரியாவின் அனலிக்கா கவிதை தொகுப்பி ற்கு வெம்பாக்கம் ஏ.பச்சையப் பன்-செல்லம்மாள் பல.ஜெகநா தன் நினைவு விருது வழங்கப் பட்டது. பசி கொண்ட இரவு சிறு கதை தொகுப்பிற்கு அகிலா சேது ராமன் நினைவு விருதினை கி.அமுதா செல்வி பெற்றார். மொழி பெயர்ப்பு நூலான பாலைச்சுனை க்கு சுனில் லால் மஞ்சாலும்மூடு பெற்றார்.
அந்நூலை எழுதிய தீபேஷ் கரிம்புங்கரை உடனி ருந்தார். இதேபோன்று, மொழி வளர்ச்சி க்கு உதவும் நூல் வரிசையில் தேன்மொழி எழுதிய இலக்கிய மீளாய்வு கு.சின்னப்ப பாரதி அறக் கட்டளை விருது பெற்றது. குழந்தை இலக்கிய நூலான இதிரா ஆசிரியர் ஸ்ரீஜோதி விஜேந்திரன் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் (கொ.மா.கோதண்டம்) விருது பெற்றார். ஹோம் குறும் படத்திற்கு மீனாட்சி சுந்தர் பா. இராமச்சந்திரன் நினைவு விருது வழங்கப்பட்டது. பெரும்பாக்கம் ஆவண படத்திற்கு சஞ்சய் ரித்வான் என்.பி.நல்லசிவம்- ரத்தி னம் நினைவு விருது பெற்றார். அமரர் மு.சி.கருப்பையா பாரதி- ஆனந்த சரஸ்வதி அம்மாள் நினைவு நாட்டுப்புற கலைச்சுடர் விருதினை பானு ராஜரத்தினம் பெற்றார். மக்கள் பாடகர் திருவு டையான் நினைவு இசைச்சுடர் விருது கிடாக்குழி மாரியம்மாள் பெற்றார்.
முனைவர் த.பரசு ராமன் நினைவு நாடக சுடர் விருது எம்.எஸ்.காந்தி மேரிக்கு வழங்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமி நினைவு பெண் படைப்பாளுமை விருது அ.வெண்ணிலாவுக்கு அனுப்பப் பட்டது. தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரையாற்றினர். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆத வன் தீட்சண்யா நிறைவுரையாற்றி னார். இந்நிகழ்வில், அ.லட்சுமி காந்தன், அ.கரீம், சி.சரிதா ஜோ, ஈரோடு சர்மிளா ஆகியோர் நிகழ்வு களை ஒருங்கிணைத்தனர். முடி வில் மாவட்ட தலைவர் மு.சங்கரன் நன்றி கூறினார்.