districts

ஒப்பந்தப்படி கூலி தர மறுக்கும் அரசு நிறுவனம்

ஈரோடு, டிச.6- ஈரோடு ஆவின் கால்நடை கலப்புத்தீவன நிறுவனத்தில் ஒப் பந்தப்படி கூலி தர மறுக்கப்படுவதா கப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து தொழிலாளர்கள் வெள்ளி யன்று அமைச்சரிடம் மனு அளித் தனர். ஈரோடு மாநகரம், சென்னிமலை  சாலையில் ஆவின் நிறுவனத்திற் குச் சொந்தமான கால்நடை கலப் புத் தீவன தொழிற்சாலை உள் ளது.

இந்நிறுவனத்திற்கு மூலப்  பொருட்களாக வரும் தானியங்கள் உள்ளிட்ட இதரப் பொருட்களை இறக்குவதற்கும், உற்பத்தியாகும் கால்நடை தீவனங்களை வெளியூர் களுக்கு லாரிகளில் ஏற்றுவதற்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் 60 பேர் பணியாற்றி வரு கின்றனர்.  அரசு நிறுவனத்தின் தொழிலா ளர்களான இவர்களுக்கு, கூலி என் பது பீஸ் ரேட் அடிப்படையில் (வேலையின் அளவில்) கணக்கிடப் படுகிறது. இந்தக் கூலியை நிறுவன அதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேசி முடிவு செய்வார்கள்.

அவ் வாறு முடிவு செய்யும் கூலியை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ஒப்பந்ததாரர்களாக உள்ள லாரி உரிமையாளர்கள் மூலம் தொழிலா ளர்களுக்குக் கொடுக்கிறார்கள். டன் கணக்கில் முடிவாகும் கூலி ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், லாரி ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக ளுக்கு ஒருமுறை உள்ளதால் சுமைப் பணி தொழிலாளர்களுக்கும் 2  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந் தம் என்றானது.  அதன்படி கடந்த 20.08.2024 அன்று தொழிற்சாலையின் துணைப் பொது மேலாளர் முன்னிலையில் தீவனம் ஏற்றுவதற்கும், மூலப் பொருட்கள் இறக்குவதற்கும் டன்  1க்கு ரூ.120-ம், 25கிலோ மூட்டை இறக்குவதற்கு மூட்டை 1க்கு ரூ.5ம், புதிய சாக்குக் கட்டு இறக்க பேல்  1க்கு ரூ.15 என ஒப்பந்தம் செய்யப் பட்டது.

புதிய ஒப்பந்தப்படி கூலியை 21.09.2024 முதல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒப் பந்ததாரர்களான லாரி உரிமையா ளர்கள் கொடுக்க வேண்டும்.  இந்நிறுவனத்தில் சுமை ஏற்றுவ தற்கு ஒப்பந்ததாரர்கள் மொத்தம் 6  பேர் ஆவர். இவர்களில் 4 பேர் ஒப் பந்தப்படி கூலியைக் கொடுத்து வந்தனர். ஆனால் இருவர் ஒப்பந் தப்படி கூலியை உயர்த்திக் கொடுக்கவில்லை. இதனால் மற்ற  4 பேரும் உயர்த்தப்பட்ட கூலியைக் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமைப்பணி தொழிலா ளர்கள் வேறு வழியின்றி வேலை நிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ள னர்.

 இதற்கு முழு முதற்காரணம் நிறு வனத்தின் துணைப் பொதுமேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளே ஆவர். ஆவின் கலப்புத் தீவன தொழிற் சாலையில் தொழில் அமைதி சீர் குலைவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச் சனையாக மாறுவதற்கான நிலை உருவாகியுள்ளது. ஆகவே, தாங் கள் இந்த பிரச்சனையில் தலையிட வும், அதன் மூலம் தொழிலாளர் களுக்கு ஒப்புக் கொண்டபடி கூலி உயர்வு கிடைக்கவும், ஆவின் நிறு வனத்தில் அமைதியாகவும், சுமூக மாகவும் வேலை நிலையைக் கொண்டு செல்லவும் உறுதி செய்யு மாறு சிஐடியு சங்கத்தின் தலைவர் டி.தங்கவேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச் சர் சு.முத்துசாமியிடம் வெள்ளி யன்று மனு அளித்தனர்.