தருமபுரி, டிச.11- ஊதிய உயர்வு வழங்கக்கோரி அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தினர் இணைந்து வியா ழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சேலம் கோட்ட இணை செயலாளர் ஏ.மாதேஸ்வன், முதல்நிலை அதிகாரிகள் சங்க தலைவர் பொன்னம்மாள், வளர்ச்சி அதி காரிகள் சங்க தலைவர் குமரவேல், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் சந்திரமெளலி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். இதில் எல்ஐசி ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதிய உயர்வு கோரிக்கையில் மத்திய அரசும், எல்.ஐ.சி நிர்வாக மும் காலதாமதம் செய்யக்கூடாது. ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.