நாமக்கல், செப்.13- நாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன் னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாயன்று நடைபெற்றது. உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி புத்த கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அதனைத்தொ டர்ந்து தற்கொலை தடுப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன்பின் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத் தார். இப்பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, தற்கொலைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி யாகச் சென்றனர்.